Site icon பாமரன் கருத்து

அமெரிக்க பாடப்புத்தகத்தில் இடம்பிடித்த சாமானிய இந்தியர் | Forest Man Of India

நீங்கள் செய்கின்ற செயலால் தான் நினைவில் வைக்கப்படுவீர்கள், கொண்டாடப்படுவீர்கள். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் வருங்கால தலைமுறைக்காகவும் தான் சார்ந்த நிலத்திற்காகவும் இளம் வயதில் ஒவ்வொரு மரமாக நடத்துவங்கி 550 ஏக்கர் அடர் காட்டினை உருவாக்கி சாதனை செய்திருக்கிறார், ஜாதவ் பயங்.

அமெரிக்காவில் இருக்கும் பிரிஸ்டல் கனெக்டிகட் பகுதியில் இருக்கும் Green Hills பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுற்றுசூழல் பாடப்பிரிவில் ‘Forest Man Of India’ எனும் தலைப்பில் இந்தியாவின் காடு மனிதர் ஜாதவ் பயங் என்பவரைபற்றிய பாடம் சேர்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குழந்தைகள் சாமானிய இந்தியர் ஒருவரைப்பற்றி படிக்கிறார்கள் என்பது பெருமைமிக்க விசயமாக பார்க்கப்படுகிறது.

இதுபற்றி ஆசிரியர் நவமி சர்மா பேசும்போது ‘எனது பள்ளி மாணவர்களுக்கு பத்ம ஸ்ரீ ஜாதவ் பயங் என்பவரின் சாதனைப்பயணம் பற்றிய பாடம் எடுக்கப்படுகிறது. இவரைப்பற்றி பாடம் எடுப்பதற்கு முக்கியக்காரணம், ஒரு தனிமனிதர் ஒருவரால் எத்தகைய நேர்மறையான தாக்கத்தை இந்த பூமியில் ஏற்படுத்திட முடியும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக இருக்கிறார் என்பதே’

கிழக்கு அசாம் பகுதியில் இருக்கும் மஜூலி எனும் பகுதியில் இருக்கும் தரிசு நிலப்பகுதியில் ஒவ்வொரு மரமாக நட ஆரம்பித்தார். கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவரது எதிர்பார்ப்பற்ற செயலின் காரணமாக 550 யேக்கர் பரப்பளவில் அடர்த்தியான காடாக அந்தப்பகுதி உருவாகி இருக்கிறது. தற்போது யானை, மான், கரடி, புலி என பல்வேறு விலங்குகள் வாழும் காடாக மாறியிருக்கிறது.

மிகவும் இளம் வயதிலேயே சுற்றுசூழல் பிரச்சனையை உணர்ந்து தன்னால் ஆன முயற்சியை வெகு நாட்களாக தொடர்ந்து செய்து வந்ததன் காரணமாக இத்தகைய சாதனையை படைத்திருக்கிறார் பயங் என்கிறார்கள் அவரை கொண்டாடும் அறிஞர் பெருமக்கள்.

இந்த நாட்டில் மாற்றவேண்டிய எவ்வளவோ விசயங்கள் இருக்கின்றன. அவற்றை செய்வதற்கு யாராவது வருவார்களா என அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் தானே ஒரு துரும்பையேனும் அதற்காக செய்தால் மாற்றம் நிச்சயம் என்பதை நிரூபித்துக்காட்டியவர் என்பதனாலேயே உயர்ந்து நிற்கிறார் ஜாதவ் பயங்.

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version