Site icon பாமரன் கருத்து

facebook இவ்வளவு தகவல்களை சேமிப்பது,பாதுகாப்பது எப்படி ?

2017 கணக்கின்படி தினம் 250 பில்லியன் போட்டோக்கள் facebook இல் சேமிக்கப்பட்டு இருக்கின்றது . இதோடு தினமும் 350  மில்லியன் போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகிறது . தற்போது அதிகமாக இருக்கலாம் . அதனைப்போலவே கோடிக்கணக்கான வீடியோக்களும் அப்லோட் செய்யப்படுகின்றன .

தினம் 4 பீட்டாபைட் (petabyte) அளவிற்கு புதிய டேட்டா சேமிக்கப்படுகிறது . ஒரு பீட்டாபைட் என்பது 1000 TB .

தினம் 1 .37 பில்லியன் நபர்கள் தினம் facebook பயன்படுத்துகின்றனர் .இத்தனை அதிகப்படியான தகவல்களை , அதிகப்படியான நபர்கள் பயன்படுத்திட வேண்டுமெனில் எத்தனை வேகமான சர்வர்களை , கம்ப்யூட்டர்களை facebook வைத்திருக்க வேண்டும் ?

 

facebook எவ்வாறு செய்கிறது ?

மிக அதிகமான நபர்களால் பார்க்கக்கூடிய முன்னணி இணையதளமாக ஆகிவிட்டது facebook . தனது பயனாளர்கள் அப்லோட் செய்யும் எதனையும்  அனுமதிக்கிறது .

அத்தனை போட்டோக்கள் , வீடியோக்கள் என அனைத்துமே சேமிக்கப்படுகிறது . இதற்காக  உலகமெங்கும் பல பகுதிகளில் facebook நிறுவனம் தனது டேட்டா சென்டர்களை அமைத்துள்ளது .

இதற்காக facebook முன்னரே மக்கள் எவ்வளவு போட்டோ  ,வீடியோக்களை அப்லோட் செய்வார்கள் என்பதை கணித்து அதற்கு முன்பாகவே அந்த இலக்கினை அடைந்துவிடுவதுதான் facebook வெற்றிக்கு காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள் .

facebook 400 டேட்டா சென்டர்களை நடத்திவருகிறது …நீங்கள் இதனை படிக்கும்போது அந்த எண்ணிக்கை கூடியிருக்கும் . அந்த எண்ணிக்கையில்
அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது .

நாம் அப்லோட் செய்வதை தொடர்ந்துகொண்டே போவதைப்போலவே facebook டேட்டா சென்டர்களை உருவாக்கிக்கொண்டு போகிறது .

 

டேட்டா அதிகமானாலும் வேகம் குறைவதில்லையே எப்படி ?

உண்மைதானே , நாம் சாதரணமாக பயன்படுத்தும் கணினிகளில் வேகம் குறைந்தால் உடனே பழைய பைல்களை அழித்துவிடுகிறோம் . ஆனால் facebook அவ்வாறு செய்யமுடியுமா ? அப்படிச்செய்தால் நமது பழைய போட்டோக்களை கண்டு ரசிக்க முடியாதே !

facebook ஊழியர்கள் கண்டுபிடித்ததில் 82 சதவீகிதம் நாம் பார்ப்பது , லைக் செய்வது கமெண்ட் செய்வது 8 சதவிகித போட்டோ மற்றும் வீடியோக்களைத்தான் .இங்குதான் facebook தனது டேட்டா நிர்வகிக்கும் திறனை வெளிப்படுத்தியுள்ளது .

மக்கள் அதிகம் பார்க்கும் பைல்களை மிக அதிகவேகமாக வழங்கிட அதற்கேற்ற சர்வர்களிலும் பழைய பைல்களை அதற்கு அடுத்த நிலையில் உள்ள டேட்டா சென்டர்களிலும் சேமித்துவைப்பதாக கூறுகிறது .

இதற்காக மூன்று தரங்களாக டேட்டா பிரிக்கப்படுகிறது .  ஹாட் (Hot ) , வார்ம் (Warm ) , கோல்டு (Cold ) . நாம் அதிகமாக பயன்படுத்தும் தகவல்களை நல்ல தரமுள்ள சர்வர்களிலும் (Hot) , அதற்கு அடுத்த நிலையில் இருக்கக்கூடிய தகவல்களை விலைகுறைவான சர்வர்களிலும் சேமித்து வைக்கிறது . இதன் மூலமாக செலவு கட்டுப்படுத்தப்படுகிறது  .

நாம் அதிகம் பயன்படுத்தாத தகவல்களை சேமிக்க பிரினெவில்லே மற்றும் ஒரேகன் பகுதிகளில் டேட்டா சென்டர்கள் செயல்படுகின்றன .

 

நமது தகவல்களுக்கான பாதுகாப்பு  ?

 

நமது அன்றாட செயல்பாடுகள் அனைத்தையும் facebook இல் அப்லோட் செய்துவிடுகிறோம் . இணையம் என்றாலே  ஹேக்கிங் இருப்பதும் தகவல்கள் கசிவதும் தவிர்க்க முடியாததாகிவிட்டது .

ஆனால் இதனை முறியடிக்க பல பரிசோதனைகளை செய்துகொண்டே இருக்கின்றது facebook . தனக்கென பலகட்ட பாதுகாப்புகளை செய்துவைத்திருக்கிறது . அதனையும் மீறி அதன் சர்வர்களுக்குள் நுழைவது என்பது மிக கடினமான ஒன்று .

இயந்திரங்களை கூட நம்பிவிடலாம் , ஆனால் டேட்டா சென்டரில் வேலைபார்க்கும் ஆட்கள்  நினைத்தால் , நிச்சயமாக முடியாது என்கிறது facebook . பரிசோதனைகள் அவ்வளவு கெடுபுடியாம் .

நாமும் கொஞ்சம் அக்கறையோடு இருக்கவேண்டும்

வல்லவனுக்கு  வல்லவன் வையகத்தில் பிறப்பதுண்டு . ஆகவே facebook 100 சதவிகித பாதுகாப்பு கொண்டது என சான்றிதழ் கொடுக்க முடியாது . நாமும் சில தகவல்களை இணையத்தில் பகிராமல் இருப்பதே சாலச்சிறந்தது .

படியுங்கள் …பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிருங்கள் .

நன்றி

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version