[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
ஒவ்வொருவருக்கும் இன்று செல்போன் இன்றியமையாததாக மாறிவிட்ட தொழில்நுட்ப யுகத்தில் Gmail – ம் தேவையானதாக மாறிவிட்டது. கூகுள் நிறுவனம் வழங்குகின்ற ஜிமெயில் வசதியானது இலவசம் என்பதனால் அனைவரும் அதனை பயன்படுத்துகின்றனர். Google தற்போது ஜிமெயிலில் புதிய அப்டேட் சிலவற்றினை செய்துள்ளது. வெறுமனே பார்ப்பதற்கு மட்டுமல்லாமல் பல சிறப்பான வசதிகளை இந்த அப்டேட் கொண்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் அனைவருக்கும் தானாகவே புதிய அப்டேட் வந்துவிடும் என்பதனால் அதில் என்னென்ன மாற்றங்கள், சிறப்பம்சங்கள் செய்யப்பட்டிருக்கின்றன என்பதனை பார்ப்போம்.
புதிய Gmail அப்டேட்டை இப்போதே பெறுவது எப்படி?
தற்போது அனைவராலும் புதிய ஜிமெயில் எப்படி இயங்குகிறது என்பதனை பார்க்க முடியும், பிடித்திருந்தால் இப்போதே கூட New Gmail க்கு மாறிக்கொள்ளலாம். Gmail Update version ஐ பெறுவதற்கு படத்தில் காட்டியுள்ளது போல வலது மேற்புறத்தில் இருக்கும் ஆப்சனை கிளிக் செய்து ‘Try the new Gmail’ என்ற ஆப்சனை செலக்ட் செய்திடுங்கள். சில நொடிகளில் புதிய ஜிமெயில் க்கு மாறிவிடுவீர்கள்.
>> Preview Attachments Without Opening Emails
முன்பெல்லாம் attachment ஏதேனும் gmail இல் வந்தால் மெயிலை திறந்தால் மட்டுமே வந்திருக்கும் attachment குறித்த தகவலை நம்மால் பார்க்க, தெரிந்துகொள்ள முடியும். New Gmail Update இல் மெயிலை திறந்து பார்க்க வேண்டியது கிடையாது. Attachment அனைத்தும் வெளியிலேயே தெரியும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, அதனை கிளிக் செய்து preview பார்த்துக்கொள்ளவும் முடியும்.
>> Calendar, Notes, and Tasks in One Window
முன்பு Calendar, Notes, and Tasks போன்றவற்றினை பார்க்க வேண்டும் என்றால் வேறொரு இடத்திற்கு சென்றுதான் பார்க்க முடியும். இப்போதைய புதிய அப்டேட் படி நீங்கள் ஜிமெயில் இல் இருந்து வேறெங்கும் செல்லாமலேயே Calendar, Notes, and Tasks போன்றவற்றினை பார்க்க முடியும். படத்தில் காட்டப்பட்டுள்ளது போல வலது புறத்தில் அதற்க்கான ஆப்சன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை கிளிக் செய்து உங்களால் அனைத்தையும் வேறெங்கும் செல்லாமலே பார்க்க முடியும்.
>> Snooze, Archive, and Delete Emails with One Click
நாம் மொபைலில் ஜிமெயில் பயன்படுத்திடும் போது இடது வலது புறமாக Swipe செய்து மெயிலை டெலீட் செய்திடலாம். அதைப்போலவே தற்போது புதிய ஜிமெயில் அப்டேட் இல் Desktop version – இலும் Snooze, Archive, and Delete போன்றவற்றினை செய்வதற்கு ஆப்சன்கள் mail க்கு அருகிலேயே இருக்கும். ஆகையால் உங்களால் உடனுக்குடன் Action களை எடுக்க முடியும்.
>> Confident Mode and Self destructing email
தகவல் பரிமாற்றத்திற்கு மிக முக்கியம் பாதுகாப்பு தான். நாம் அனுப்பிடும் தகவலை பிறர் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள், யாருடன் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதெல்லாம் மிக மிக முக்கியமான விசயங்கள். தற்போது ஜிமெயில் தனது புதிய அப்டேட்டில் Confidential Mode ஆப்சனை கொண்டு வந்திருக்கிறது.
- இந்த ஆப்சனை பயன்படுத்திட Compose Email கொடுத்தபின்னர் கீழே இருக்கும் lock பட்டனை கிளிக் செய்திடுங்கள்.
- எப்போது நீங்கள் அனுப்பிடும் மெயில் தானாக அழிந்திட வேண்டும் என நினைக்கிறீர்களோ அந்த தேதியை குறிப்பிடுங்கள்
- அடுத்ததாக No SMS passcode மற்றும் SMS passcode என்ற இரண்டு ஆப்சன்கள் இருக்கும். அதில் SMS passcode ஆப்சனை செலக்ட் செய்து மேலும் உங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள முடியும். ஆம் SMS passcode ஆப்சனை செலக்ட் செய்தவுடன் send பட்டனை அழுத்திடுங்கள், அப்போது Recipient இன் மொபைல் எண்ணை பதிவிடவும்.
- அவ்வாறு கொடுத்தபின்னர் பெறுபவரால் உங்களது email ஐ திறந்து தகவலை படிக்க முடியாது. ஆப்சனை கிளிக் செய்தால் நாம் கொடுத்த அவரது மொபைல் எண்ணுக்கு வரும் 6 இலக்க எண்ணை பதிவிட்டால் மட்டுமே அவரால் ஈமெயில் ஐ திறந்து பார்க்க முடியும்.
உபயோகமாக இருந்திருந்தால் கமெண்ட் செய்திடுங்கள், நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்.
பாமரன் கருத்து