Site icon பாமரன் கருத்து

ஆசிரியரை காதலிக்காதவர்கள் உண்டோ? ஆசிரியர் தின சிறப்பு பதிவு

காதல் என்றவுடன் வழக்கம்போல நினைத்துக்கொள்ளாதீர்கள் , சாதாரண அன்பினை விட பல மடங்கு உயர்ந்ததைத்தான் காதல் என குறிப்பிடுகிறோம் 😍

 

முன்னால் குடியரசுத்தலைவர் திரு ராதாகிருஷ்ணண் அவர்களின் பிறந்ததினமான செப்டம்பர் 05 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகின்றது . இந்த தினமானது  சிறந்த ஆசிரியர்களுக்கு விருதினை கொடுத்து புகழ் சேர்ப்பதற்க்கானது மட்டுமல்ல , நமக்கு பயிற்றுவித்த , பயிற்றுவிக்கின்ற ஆசிரியபெருமக்களுக்கு நமது நன்றியை சொல்லுகின்ற, கடமையை நினைவுபடுத்துகின்ற தினமாக நான் பார்க்கின்றேன் .

 

 

உண்மையான சாதனையாளர்கள் ஆசிரியர்கள்

 

தேறாது என திரிந்தவனையும்
தேராக்கி சமூகத்தில் விட்டவர்கள் ஆசியர்கள் என்பேன்

 

உச்சத்திற்கு சென்றவர்களிடம் உங்களது சாதனைக்கு யார் காரணமென்றால் ” ஆசிரியர் ” என்பார் . அன்றாட பிழைப்பிற்க்கே கஷ்டப்படும் தொழிலாளியிடம் சென்று உங்களின் இந்த நிலைக்கு காரணம் என்ன என வினவினால் “எங்க வாத்தியார் ஒழுங்கா படினு சொன்னாரு , கேக்கல ” அதான் என்பார் .

 

தனது நகையை விற்று பள்ளியை மேம்படுத்திய ஆசிரியர்

 

ஆக ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் முக்கிய கருவியாக ஆசிரியர் இருந்துகொண்டே இருக்கிறார் .

 

கூகுளுக்கே CEO ஆனாலும் தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய வல்லுநராக இருந்தாலும் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் பதவியில் இருந்தாலும் தனக்கு சொல்லிக்கொடுத்த ஆசிரியரை கண்டவுடன் படிக்கின்ற காலத்தில் இருக்கின்ற அதே பணிவு நம்முடன் வந்து ஒட்டிக்கொள்ளுமே அந்த தருணம் தான் “உண்மையான சாதனையாளர்கள் ஆசிரியர்கள் ” என்பதனை ஒப்புக்கொள்ளுகின்ற தருணம் .

 

ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமிடையேயான நட்பு

 

சிறந்த பெற்றோரால் கூட அனைத்து குழந்தைகளின் மீதும் அன்பும் அக்கறையும் செலுத்திட முடியாது . ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்களிடம் ஒரேவிதமான அன்பையும் அக்கறையையும் செலுத்திடும் பெரிய இதயம் ஆசிரியர்களிடம் மட்டுமே இருகின்றது .

 

Teachers day

 

ஆண்டுக்கொரு  மாணவர் குழு புதிது புதிதாக வரும்போது ஆசிரியர்களால் பல சமயங்களில் அனைவரையுமே நியாபகத்தில்  வைத்துக்கொள்ளமுடிவது இல்லை . ஆனால் அவர்களுடைய அன்பு மாறாதது .

 

படிக்கின்ற காலத்தில் ஆசிரியர்களின் மீது அளவுக்கதிகமான அன்பை செலுத்தியர்களில் நானும் ஒருவன்

 

பல சமயங்களில் ஆசிரியர்களை காணும்போது நம்முடைய பெயரை சொல்லிய பிறகுதான் அவர்களால் நியாபத்திற்கு கொண்டுவர முடிகின்றது . அப்படி கொண்டுவந்ததும் அவர்கள் நம்மை விசாரிக்கும்போது ஏற்படுகின்ற அந்த நிமிடம், கோடிகள் கொடுத்தாலும் கிடைக்காத பரவசமான நிமிடம் . நிச்சயமாக நீங்கள் ஒவ்வொருவரும் அந்த சந்தோசத்தை அனுபவித்து இருப்பீர்கள் என நம்புகின்றேன் .

 

இன்றைய தலைமுறையில் ஆசிரியர் மாணவர் உறவு சற்று இடைவெளி மிகுந்ததாக இருக்கின்றது . நாம் செய்யவேண்டியது நம் பிள்ளைகளுக்கு ஆசியர்களை மதிக்க வேண்டியதன் முக்கியதுவத்தை சொல்லிக்கொடுப்பது தான் .

 

தன்னிடம் கற்றவர்கள் முன்னேறிச்செல்வதை பார்த்து பரவசமடைகின்ற ஒப்பற்ற ஆசியர்களுக்கு கோடான கோடி அன்பையும் மரியாதையையும் உரிதாக்குவோம் .

 

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் !

 

பாமரன் கருத்து

 

பாமரன் கருத்து
Exit mobile version