Site icon பாமரன் கருத்து

எவரெஸ்ட் சிகரம் பற்றிய 7 சுவாரஸ்யமான தகவல்கள் | Everest Mountain In Tamil

எவராலும் எட்ட முடியாத சாதனையை நாம் எப்போதும் எவரெஸ்ட் சிகரத்தோடு தான் ஒப்பிட்டு பேசுவோம். அதற்கு மிக முக்கியமான காரணம், எவரெஸ்ட் சிகரத்தின் உயரமும் அதில் ஏறி அதன் உச்சத்தை தொடுவதில் இருக்கக்கூடிய சவால்களும் தான். உலகத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் எவரெஸ்ட் சிகரம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே உங்களுக்காக……

1. எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ள நாடு எது?

எவரெஸ்ட் சிகரம் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய இமயமலையின் உச்சியில் உள்ளது. இது நேபாளத்திற்கும் சீனாவின் (திபெத்) தன்னாட்சிப் பகுதிக்கும் இடையே உள்ள எல்லையில் அமைந்துள்ளது.

2. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண் யார்?

பச்சேந்திரி பால் தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண். 1984 ஆம் ஆண்டு இவர் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார். இவருக்கு இந்தியாவின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

3. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழர் யார்?

நீலகிரி மாவட்டம், ஊட்டி லவ்டேல் பகுதியை சேர்ந்த ராணுவ வீரரான சிவக்குமார் தான் முதல் முதலாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழர் ஆவார். இந்திய ராணுவத்தால் தேர்வு செய்யப்பட்ட குழுவினருடன் இணைந்து இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

4. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நபர் யார்?

மே 29, 1953 அன்று எட்மண்ட் ஹிலாரி மற்றும் ஷெர்பா டென்சிங் நோர்கே ஆகிய இருவர் தான் முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்கள்.

5. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?

அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி, எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டராக (29,032 அடி). இதற்கு முன்னர், எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்  8,844.43 மீட்டர் என சீன அறிவித்து இருந்தது. மீண்டும் எடுக்கப்பட்ட கணக்கீட்டின் படி, சீனாவும் நேபாளமும் இணைந்து 8,848.86 மீட்டர் என அறிவித்துள்ளது.

6. எவரெஸ்ட் சிகரம் ஏறும் முதல் தமிழ்ப் பெண் யார்?

முத்தமிழ்ச்செல்வி என்ற முதல் தமிழ் பெண் தான் எவரெஸ்ட் சிகரம் ஏறும் முதல் தமிழ்ப் பெண்.

7. எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் இந்தியர் யார்?

அவதார் சிங் சீமா (1933-1989) எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய மனிதர் மற்றும் உலகின் பதினாறாவது நபர் ஆவார். இந்திய ராணுவத்தால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு இரண்டு முறை முயற்சித்து தோல்வி அடைந்த பிறகு மூன்றாவது முயற்சி 1965 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 பேருடன் இணைந்து அவதார் சிங் சீமா ஏறினார்.

8. எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் யார்?

ஜப்பானின் தபேய் ஜுன்கோ தான் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி . இவர் 1975 ஆம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்தார்.

Share with your friends !
Exit mobile version