Site icon பாமரன் கருத்து

என் முதல் கவிதை

என் முதல் கவிதை

என் முதல் கவிதை

“என் முதல் கவிதை”

பட்டாம்பூச்சியின் வண்ணங்களின் ஆச்சர்யம்

கண்களை சிமிட்ட விடாதது போல

புத்தக இதழில் வீற்றிருக்கும் சொல் வார்ப்புகள்

இதயம் துடிக்கவிடாமல் செய்தன…

 

அசைந்தாடும் பேருந்தில்

அரைகுறை துயிலில்

மனதை மெல்ல வருடி

தெரியாத வரிகளும்

முணுமுணுத்து போயின

கவிதையின் ஆதிக்கத்தில்…

 

இதயம் துடிக்க மறந்தது

தேர்ந்தவன் எழுதியதால்

இருந்தாலும்

ஏதோ ஒரு பரவசம்

ஏதோ ஒரு பேராசை

விளைவு இக்கவிதை

 

எதுகை மோனை அறியாமல்

இதயம் தொடும் வித்தை தெரியாமல்

தெரியாத ‘மா’ க்களை கரையவிட்டு

அலமாரியில் விருப்பமில்லாமல்

உறங்கி கொண்டிருக்கும் ஓவியமே

“என் முதல் கவிதை”

Exit mobile version