Site icon பாமரன் கருத்து

தொடர் வேட்புமனு நிராகரிப்பு – அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்

 

தொடர் வேட்புமனு நிராகரிப்பு – அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும்

ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்களில் தாக்கல் செய்யப்பட்ட பலரது வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் நிராகரித்தது .

குறிப்பாக விஷால் , தீபா மற்றும் பல சுயேட்சைகளின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன .

எதனால் நிராகரிக்கப்படுகிறது :

வேட்புமனுவை நிராகரிக்க உரிமையுள்ளவர் தேர்தல் அதிகாரி . வேட்புமனு பரிசீலனையின்போது தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவில் தவறான தகவல்களோ அல்லது தகவல்கள் நிரப்பப்படாமல் இருந்தாலோ அந்த வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரிப்பார் .

வேட்புமனுவை தேர்தல் அதிகாரி பரிசீலனை செய்யும்போது அந்த வேட்புமனுவிற்க்கான பிரதிநிதிகள் உடன் இருப்பார்கள் .

விஷாலின் வேட்புமனு :

விஷாலின் வேட்புமனு தற்சமயம் நிராகரிக்கப்பட்டுள்ளது . அதற்கான காரணமாக தேர்தல் அதிகாரி கூறியிருப்பது ” தங்களது தொகுதியாக இல்லாதபட்சத்தில் ஒருவர் வேட்புமனுவை தாக்கல் செய்யும்போது அந்த தொகுதியை சேர்ந்த 10 பேர் அந்த நபரை முன்மொழிய வேண்டும் ” . விஷாலின் வேட்புமனுவில் முன்மொழிந்த 10 பேரில் இருவர் பின்வாங்கியதால் விஷாலின் மனுவை நிராகரித்தார் தேர்தல் அதிகாரி .

இதனையடுத்து விஷால் பின்வாங்கிய இருவரிடமும் பேசியதாக வெளியான ஆடியோ வெளியானது . அதில் ஆளும்கட்சியை சேர்ந்த நபர் மிரட்டியதாலேயே அவர்கள் பின்வாங்கியதாக தெரிவித்தனர் .

சட்டம் மாற்றப்பட வேண்டும் :

விஷாலின் மனுவை நிராகரித்ததில் தவறு இருக்கிறதா இல்லையா என்பதனை ஆராய்வதை விட சட்டத்தில் உள்ள குறைபாட்டினை கலைவதே இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்கும் .

ஒருவர் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார் என்றால் அவர் தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவராகவே கருதப்படுகிறார் . அவ்வாறு இருக்கையில் அவரது வேட்புமனுவில் உள்ள சிறு தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கொடுக்கப்படாமல் அதனை நிராகரிப்பது என்பது ஜனநாயக விரோதம் .

படிப்பறிவு இல்லாதவர்களும் தேர்தலிலே போட்டியிடலாம் என விதிகளை வைத்துவிட்டு விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யப்படாத போது அதனை திருத்தி மீண்டும் ஒருமுறை கொடுக்க வாய்ப்பு இல்லாமல் நிராகரிப்பது சரியாக இருக்குமோ ?

இதனை பயன்படுத்தி அதிகாரமிக்கவவர்கள் எளிமையானவர்களை கடைசி நேரத்தில் தேர்தல் போட்டிகளத்தில் இருந்து வெளியேற்ற ஏதுவாக அமைந்து விடுகிறது . இது மாற்றப்பட வேண்டும் .

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version