Site icon பாமரன் கருத்து

எடப்பாடி பழனிசாமி : நல்ல சாய்ஸ்

எடப்பாடி பழனிசாமி

இத்தனை ஆண்டுகள் ஆட்சியை கொண்டு சேர்த்தவர் என்ற ஒற்றைக் காரணத்துக்காகவே எடப்பாடி பழனிச்சாமி அவர்களை நல்ல சாய்ஸ் என சொல்லலாம்

 

அடுத்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் யாரை முன்னிறுத்தி போட்டியிடுவது என்பது குறித்த பேச்சுக்கள் கடந்த சில வாரங்களாகவே பெரும் விவாதப்பொருளாக தமிழகத்தில் இருந்தது. நாம் ஏற்கனவே கணித்துவிட்டது மாதிரியே ரேஸில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வென்றிருக்கிறார். அவரே அதிமுகவின் முதல்வர் வேட்பாளர்.

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் யார் முதல்வர் வேட்பாளராக வருவதற்கு விரும்புகிறீர்கள் என்ற ரீதியில் கருத்துக்கணிப்புகள் நடைபெற்றன. அதில் தற்போதைய துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் இல்லை.

என்னைப் பொறுத்தவரையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டிருப்பது அதிமுகவின் நல்ல சாய்ஸ் என்றே கூறுவேன். ஜெயலலிதா அவர்கள் மட்டுமே அதிமுகவின் முகம் என்றிருந்த சமயத்தில் அவரால் முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டவர் பன்னீர்செல்வம் அவர்கள். ஆகவே அவரது பெயரும் அதிமுக தொடர்களிடையே அறிமுகமாகி இருந்தது.

ஜெயலலிதா அவர்கள் மறைந்த பிறகு ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வர் ஆனார். அப்போது அரசியல் அரூடம் சொன்னவர்கள் எல்லாம் ‘இந்த ஆட்சி இன்னும் இரண்டொரு மாதங்களில் கலைந்துவிடும் என்று தான் கணித்திருந்தார்கள். திமுகவும் அப்படியே கூறிக்கொண்டு வந்தது.

 

 

யார் யாரை எப்படி சமாதானம் செய்தாரோ தெரியவில்லை. ஆனால் ஆட்சியை 5 ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்திக்காட்டிவிட்டார் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள். மத்தியில் ஆளுகின்ற பாஜகவோடு அவர் வளைந்து சென்றுவிட்டார் எனக்கூறுவோர் பலர் இருக்கிறார்கள். அரசியலில் என்னவேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். சில விசயங்களில் நாம் நினைத்த வலிமையோடு மத்திய அரசை எதிர்க்காவிட்டாலும் கூட அவரால் இயன்ற வரைக்கும் தமிழகத்தின் வலிமையை காட்டியிருக்கிறார் என்றே சொல்லுவேன். உதாரணத்திற்கு, மத்திய அரசின் மும்மொழிக்கொள்கையை ஏற்கப்போவது இல்லை, இருமொழிக்கொள்கை தான் தங்களுடைய கொள்கை என வெளிப்படையாக அறிவித்தாரே.

அண்மையில் நாம் நண்பர்களிடையே விவாதம் செய்கின்ற போது தற்போதைய முதல்வர் பழனிச்சாமி அவர்களின் திறமை பெருவாரியாக மேம்பட்டிருப்பதாக குறிப்பிட்டு பேசுகிறார்கள். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு காரசாரமாக பதில் கூறுவதாக இருக்கட்டும், உட்கட்சியை கட்டுப்படுத்தி தன்னை முன்னிறுத்திக்கொள்ளவதாகட்டும் அனைத்திலும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வென்றிருக்கிறார் என்றே கூறலாம். கடந்த சில ஆண்டுகளில் அதிமுகவின் அதிகார மையத்தின் முகமாக எடப்பாடி பழனிசாமி அவர்கள் தான் மக்களிடம் சென்று அடைந்திருக்கிறார். ஆகவே அவரை முன்னிறுத்தினால் மக்கள் எளிமையாக புரிந்துகொள்வார்கள்.

நான் யாருக்கும் சார்பானவன் கிடையாது. ஆனால் அரசியலில் ஆரோக்கியமான போட்டி இருக்க வேண்டும் என விரும்புகிறவன். யார் வென்றாலும் எதிர்க்கட்சியும் குறிப்பிட்ட பலத்தோடு இருக்குமாயின் மக்களுக்கு அது நன்மை பயக்கும். இல்லையேல், நாடாளுமன்றத்தில் பாஜக எனும் பெரும் எண்ணிக்கை கொண்ட பலமான கட்சியை வெகுசில எண்ணிக்கைகொண்ட காங்கிரஸ் பெயரளவில் எதிர்த்துக்கொண்டு இருப்பதைப்போல நிலைமை ஆகிவிடும்.

அந்த வகையில் திமுகவிற்கு நல்ல போட்டியளிக்க அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நல்ல தேர்வு என்றே கூறுவேன். உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள். 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version