நவம்பர் 17 ஆம் தேதி ஜோத்பூர் – மன்னார்குடி விரைவு ரயிலை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து பதப்படுத்தப்பட்டு வந்த இறைச்சியை கைப்பற்றினர். அப்போது அந்த இறைச்சியில் வால் நீளமாக இருந்ததினால் நாய்கறியாக இருக்கலாம் என கூறப்பட்டது. பிரியாணியில் நாய்கறி என செய்திகளிலும் சமூக வலைத்தளங்களிலும் மின்னல் வேகத்தில் பறந்தன. இதனால் கடந்த நான்கு நாட்களாக பிரியாணி விற்பனை பெருத்த அடியை சந்தித்து வருகிறது.
ஒருபுறம் விற்பனை அடிபட்டுவிட்டது என்ற நோக்கத்தில் பார்த்தாலும் மறுபக்கத்தில் மக்களை ஆட்டுக்கறி சாப்பிடுவதில் இருந்து விடுவிக்க மேற்கொள்ளப்பட்ட சதியாக இருக்கலாம் எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. இது எதார்த்தமாக நடந்ததா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்டதா என தெரியவில்லை. ஆனாலும் நாம் கற்றுக்கொள்ள சில விசயங்கள் இதில் இருக்கின்றன.
சென்னை 🐕கால்நடை மருத்துவக்கல்லூரி 🏥மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பினா். தற்போது, இது தொடா்பாக சென்னை கால்நடை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்📜, பறிமுதல் செய்யப்பட்டவை நாய் இறைச்சி கிடையாது🚫. அவை 🐐செம்மறி ஆட்டின் இறைச்சி தான் என்று உறுதிப்படுத்தியுள்ளனா்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியம்
அன்று நாய்கறி என சொன்ன உணவுத்துறை அதிகாரிகள் இன்று நாய்கறி அல்ல அது ஆட்டுக்கறிதான் என்று சொன்னாலும் ஏற்கனவே ஏற்பட்ட தாக்கத்தில் இருந்து மக்களால் விடுபட முடியவில்லை என்பதே எதார்த்தம்.
உணவு என்பது மிக மிக நுட்பமான விசயம். ஆனால் உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் “வால் நீளமாக இருக்கிறது”என்ற ஒற்றை காரணத்தை கொண்டே நாய்கறியாக இருக்கலாம் என ஊகமாக தெரிவித்ததால் இன்று அந்த பொய் செய்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை அரசு சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. இது எதார்த்தமாக நடந்துவிட்டதெனில் துறை ரீதியான அறிவுறுத்தல்கள் அவசியம். திட்டமிட்டு நடத்தப்பட்டிருந்தால் நிச்சயமாக குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்ட வேண்டும்.
பொதுமக்களுக்கு தரமான உணவு கிடைக்கிறதா என உறுதி செய்ய வேண்டியது உணவு பாதுகாப்பு துறையின் பணி . ஆனால் ஆண்டுக்கணக்கில் சோதனை செய்யப்படாத உணவகங்கள் 90% இங்கு இருக்கின்றன. உணவு விசயத்தில் பொதுமக்களும் அரசும் அலட்சியமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
செய்தி நிறுவனங்களுக்கு பொறுப்பிருக்க வேண்டும்
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நாய்க்கறியாக இருக்கலாம் என கூறியதை “நாய்கறி என உறுதிப்படுத்திவிட்டதை போல”சில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டன. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது.
ஒருவேளை தவறாக செய்தி வெளியிட்டு இருந்தால் உடனடியாக நாய்கறி அல்ல அது ஆட்டுக்கறி தான் என்ற செய்தியையும் முக்கியத்துவம் கொடுத்து போடவேண்டும். அதுதான் சிறந்தது.
உணவு அவரவரின் உரிமை அதில் மாற்றம் ஏற்படுத்த சகுனி வேலைகளை செய்தால் மாபெரும் குற்றம்.