அண்மையில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை முற்றிலுமாக நீக்கக்கோரி ‘டெல்லி சலோ’ எனும் மாபெரும் பேரணியை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். 10 நாட்களுக்கும் மேலாக நடந்துவரும் இந்தப்போராட்டத்திற்கு பொதுமக்களின் ஆதரவும் குவிந்துவருகிறது. அரசு பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட இன்னும் முடிவு எட்டப்படாத சூழலில் போராட்டம் தொடருகிறது.
இந்தப்போராட்டத்திற்காக விவசாயிகள் தங்களுடைய ட்ராக்ட்ர் லாரிகளில் பல நாட்களுக்கு தேவைப்படும் உணவு மற்றும் ஆடைகளோடு கலந்துகொண்டிருக்கிறார்கள். இருப்பினும் போராட்ட களத்தில் நிலவும் கடும் குளிர் விவசாயிகளுக்கு பெரும் சிக்கலாக இருந்துவருகிறது. இந்த சூழ்நிலையில் தொடர்ச்சியாக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துவரும் நடிகர் மற்றும் பாடகர் தில்ஜித் தோசாஞ் என்பவர் சத்தமில்லாமல் விவசாயிகள் போராட்டத்திற்கு ரூ 1 கோடி கொடுத்திருக்கிறார்.
Baba Ang Sang Sahai Hove 🙏🏾#FarmersPortest pic.twitter.com/dds8csaLlP
— DILJIT DOSANJH (@diljitdosanjh) December 5, 2020
போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் விவசாயிகள் குளிரைப் போக்கும் ஆடைகளை வாங்கிக்கொள்வதற்காகத்தான் ரூ 1 கோடி கொடுத்திருக்கிறார். எந்தவித ஆரவாரமும் இன்றி இந்த பெரும் தொகையை கொடுத்திருப்பதனால் தான் அவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.
மற்றுமொரு பஞ்சாபி பாடகர் சிங்கா அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் இந்தத்தகவலை தெரிவித்த போதுதான் ரூ 1 கோடி கொடுத்தது அனைவருக்கும் தெரியவந்தது. இதுதவிர அரசுக்கும் அவர் கோரிக்கையை விடுத்துள்ளார், அதில் “எங்களிடம் ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது … தயவுசெய்து எங்கள் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவும். எல்லோரும் இங்கு அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். இந்த கிளர்ச்சி விவசாயிகளைப் பற்றியது. ட்விட்டரில் விஷயங்கள் திரிக்கப்பட்டன, ஆனால் உண்மை என்னவென்றால், விவசாயிகள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், இங்கு யாரும் அமைதியின்மை பற்றி பேசவில்லை.”
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!