Site icon பாமரன் கருத்து

உச்சநீதிமன்றத்தினை புரிந்துகொள்வதே சிரமமானதாக உள்ளது …

supreme_court

கடந்த ஆண்டு ஹரிஷ் சந்த் திவாரி என்பவர் தான் வேலை பார்க்கும் இடத்திற்கு அருகில் இருந்த BSNL டவரில் 14 ஆண்டுகளாக வெளிப்பட்ட கதிர்விச்சினால் தனக்கு கேன்சர் நோய் வந்ததாக  குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் இந்த டவர் 20 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் நிறுவப்பட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ரஞ்சன் மற்றும் நவீன் சின்கா அடங்கிய அமர்வு 7 நாட்களுக்கு உள்ளாக அந்த டவரினை அகற்றிட உத்தரவிட்டது.இதனை வரவேற்கும் அதே நேரத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை புரிந்துகொள்வதில் சிரமாக உள்ளது.

இதனை வரவேற்கும் அதே நேரத்தில் நீதிமன்றத்தின் செயல்பாடுகளை புரிந்துகொள்வதில் சிரமாக உள்ளது.

இதுவரை செய்யப்பட்ட அறிவியல் சோதனைகளில் செல்போன் டவரில் இருந்து மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய கதிர்வீச்சு வெளிப்படுகிறது என நிரூபிக்கப்படவில்லை. அதே நேரத்தில் உலகில் அனைவருமே ஏற்றுக்கொண்ட ஒரு விஷயம் பெரும்பாலான கேன்சர் நோய்க்கு காரணமே புகையிலை பொருட்கள் பயன்பாடு தான். ஆனால் இதனை உணர்ந்துகொண்ட நீதிமன்றம் அதற்க்கு இதுவரை தடை விதித்தது கிடையாது.

ஏன் இந்த பாகுபாடு ?

உச்சநீதிமன்றத்தின் இந்த பாகுபாட்டினை புரிந்துகொள்வதென்பது மிக கடினமாக உள்ளது. உச்சநீதிமன்றம் ஒரு டவரினை மட்டும் தடை செய்துள்ளதும் நாட்டின் பிற பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள டவர் குறித்து ஆய்வு செய்யவோ அல்லது அதனை மூடவோ உத்தரவிடாதது மேலும் சந்தேகத்தை கிளப்புகிறது.

ஒரு தனி மனிதன் பாதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் முறையிட்டவுடன் உடனடி நடவடிக்கை எடுத்ததென்பது வரவேற்கத்தக்கது. ஆனால் இதே பாதிப்பு நாட்டின் பிற பகுதி மக்களுக்கும் நடக்க வாய்ப்புள்ளது என்பதை கவனிக்க நீதிமன்றம் தவறிவிட்டது.

மேலும் புகையிலைக்கு தடை விதிக்காமல் செல்போன் டவருக்கு தடை விதித்திருப்பது பொருளாதாரம் சார்ந்த முடிவாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் என்ன தோன்றுகிறது. இந்தியாவில் பெரும்பாலான வருமானம் புகையிலை மற்றும் மது விற்பனையாலே அரசுக்கு கிடைக்கிறது. நீதிமன்றம் அதில் தலையிட மறுப்பது புரியாத புதிராகவே உள்ளது.

தீமை எந்த உருவத்தில் வந்தாலும் நீதிமன்றம் அதனை தடுக்க வேண்டும்.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version