நேற்று (ஆகஸ்டு 07 2018 ) முன்னால் முதல்வரும் திமுக தலைவருவான கருணாநிதி அவர்கள் இயற்கை எய்தினார் . கருணாநிதி அவர்களின் நெடுநாள் ஆசை , அண்ணாவின் அருகிலேயே தன்னுடைய நினைவிடமும் அமைக்கப்பட வேண்டும் என்பது .
முறைப்படி திமுகவின் செயல்தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வரிடம் சென்று மெரினாவில் இடம் ஒதுக்குவது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தனர் .
சமூக வலைதளத்தில் பரவிடும் செய்தி
காமராஜருக்கு இடம் தர கருணாநிதி மறுத்தது உண்மையா?
இதுகுறித்து அறிவதற்காக இணையதளத்தில் தேடியபோது முன்னனி செய்தி நிறுவனமான The News Minute இல் இதற்கான பதில் கொடுக்கப்பட்டுள்ளது .
காமராஜருக்கு கருணாநிதி மெரினாவில் இடம் தர மறுத்தாரா என முன்னனி காங்கிரஸ் தலைவர்களிடம் கேட்கப்பட்டது . அதற்க்கு அவர்கள் அளித்த பதிலில் ….
கருணாநிதி அவர்கள் ராஜாஜி , காமராசர் போன்றவர்களுக்கு இடம் தர மறுத்தார் என்பதில் உண்மையில்லை .
மேலும் அவர்கள் கூறிடும்போது காமராசர் இறந்தபிறகு அவரது இறுதிச்சடங்கு நிகழ்வுகளை முன்னின்று நடத்தியதே கலைஞர் தான் என்றார்கள் .
காமராசர் இறந்தபோது இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு இருந்திட்ட நேரம் ( 25 Jun 1975 – 21 Mar 1977) , இந்திய அளவில் அவசர நிலையை எதிர்த்து நின்றவர்களில் திமுகவும் அதன் தலைவரான கருணாநிதிக்கும் முக்கிய பங்கு உண்டு .
மேலும் சம்பிரதாயமாகவே காங்கிரஸ் (இந்திய கட்சிகள்) கட்சியை சேர்ந்த தலைவர்கள் இறக்கும்போது (ராஜாஜி , காமராசர் , பக்தவச்சசலம் ) போன்றோருக்கு கிண்டியில் இருக்கக்கூடிய காந்தி மண்டபத்தில் இடம் ஒதுக்கப்படுகிறது .
திராவிட இயக்கங்களை சேர்ந்த தலைவர்கள் (அண்ணா , எம்ஜிஆர் , ஜெயலலிதா , கருணாநிதி ) போன்றோருக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கபடுகிறது .
கருணாநிதி அவர்களிடம் தமிழகத்தின் சிறந்த முதல்வர் யார் என கேட்டபோது சற்றும் தயங்காமல் “நமது காமராசர் தான் “ என பதிலளித்தது போதும் கருணாநிதி காமராசர் மீது கொண்டிருந்த மதிப்பினையும் அன்பையும் காட்டுவதற்கு.
நிச்சயமாக இந்த பதிவு உண்மைகளை உங்களுக்கு சொல்லியிருக்கும் என நம்புகின்றேன் .
உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் .