Site icon பாமரன் கருத்து

தோனியிடம் கற்றுக்கொள்ளுங்கள் | Dhoni the Real Leader

Dhoni trust every player

Dhoni trust every player

நீங்கள் எந்த துறையில் சாதிக்க விரும்பினாலும் தோனியிடமிருந்து சில தலைமை பண்புகளை கற்றுக்கொண்டால் (Learn something from Dhoni) அவை உங்களை உயர்த்தும் .
தோனி ஓய்வு

 ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இளைஞர்களும் தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய சில சிறப்பான பண்புகளை இங்கே பார்ப்போம். 

அமைதியாக இருப்பது (Stay Cool)

கடைசி பந்தில் 6 ரன்கள் தேவை என்கிற நிலை வந்தால் ஆடுகளத்திற்குள் நின்றாலும் சரி , ஆடுகளத்திற்கு வெளியே இருந்தாலும் சரி தோனி அமைதியாகவே இருப்பார் . அணி வென்றால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு செல்வதும் தோற்றுவிட்டால் கண்ணீர்விட்டு கலங்குவதும் தோனியிடம் காணவே முடியாத ஒன்று .

 

 

எந்த சூழலிலும் அமைதியாக இரு

 

 

தோனியிடம் இருக்கக்கூடிய இந்த பண்பு பலருக்கு இருப்பதில்லை , சூழ்நிலைகளில் சிக்கி கவனத்தை சிதறவிட்டால் தோல்வியே நிச்சயம் .

அடுத்தவர்களை நம்புதல் (Believe Co Players)

பல போட்டிகளில் தோனி எடுக்கக்கூடிய முடிவுகளை எவராலும் கணிக்கவே முடியாது . பிறருக்கு நம்பிக்கையை கொடுத்து அவரிடமிருந்து சிறந்த பங்களிப்பை பெறுவதில் தோனிக்கு நிகர் தோனியே .சாம்பியன்ஸ் போட்டியில் முந்தைய ஓவரில் அதிக ரன்களை இஷாந்த் சர்மா கொடுத்திருந்தாலும் மீண்டும் அவரையே ஓவர் போட அழைத்தார் தோனி . தோனியின் நம்பிக்கையை உண்மையாக்க சிறப்பாக அந்த ஓவரை வீசி 2 மிக முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார் இசாந்த் . குழுவாக செயல்படும்போது அனைவரும் ஒற்றுமையாக ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும் . இதற்கு தோனி சிறந்த உதாரணம் .

சவால்களை முன்னின்று சந்திப்பது (First in Queue)

பல சமயங்களில் அணி நல்ல நிலையில் இருக்கும்போதும் சரி , கடுமையான சூழலில் இருக்கும்போதும் சரி , வரிசைப்படி இறங்காமல் தோனி எந்த இடத்திலும் களம் இறங்குவார் . இதனை பலர் விமர்சிக்கலாம் . ஆனால் அதிலும் நிச்சயமாக தலைமை பண்பு இருக்கத்தான் செய்கின்றது .

 

ஆம் ஒரு சிறந்த தலைவன் எப்படிப்பட்ட சூழல் வந்தாலும் தானே முன் செல்லுதல் வேண்டும் . அதன் மூலமாக தன்னுடய அணியினருக்கு நம்பிக்கையை கொடுக்க முடியும் . அதை ஒவ்வொரு தருணத்திலும் தோனி செய்ய தவறியது இல்லை

வெற்றியை பகிர்ந்துகொள்ளுதல் (Share the Victory)

 

பல துறைகளில் வெல்பவர்கள் வெற்றியை பெற்றவுடன் துணை நின்றவர்களை ஒதுக்கிவிடுவர் . ஆனால் ஒவ்வொரு முறை அணி வென்றதும் ஸ்டெம்ப் ஒன்றினை மட்டும் எடுத்துக்கொண்டு அணியிடம் வெற்றியை கொடுத்துவிடுவார் தோனி.

தலைக்கனம் கொஞ்சமும் கிடையாது (No head weight)

அனைத்துவிதமான கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் தோனி இன்று தன்னைவிட இளம்வயது மற்றும் அனுபவம் குறைந்த கோலியின் தலைமையின் கீழ் விளையாடுகிறார் . இதுவரை தோனிக்கும் கோலிக்கும் சிறு உரசல் வந்ததாக கூட செய்திகள் இல்லை . பொது இடங்களிலும் விளையாடும் இடங்களிலும் தோனி என்னும் மனிதருக்கு தலைக்கனம் என்பது இருந்ததே கிடையாது .

தோனியை அவரது சிறந்த பங்களிப்பிற்காக இந்தியா நினைவில் வைத்துக்கொண்டாடும்

தோனியிடம் விமர்சனங்கள் பலருக்கு பலவிதமாக இருக்கலாம் . ஆனால் அவரிடம் இருக்கக்கூடிய தலைமை பண்புகளில் எந்தவொறு விமர்சனமும் குறைபாடும் காணவே முடியாது . அவற்றை சிறிதேனும் நாம் பின்பற்றுவோமேயானால் நமது துறையில் நாமும் வெற்றி பெறலாம் .






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version