டெங்கு கொசு வளர ஏதுவாக தண்ணீர் தேங்கும் நிலையில் இருந்ததால் பல தனியார் நிறுவனங்களுக்கு பல மாவட்ட ஆட்சியர்கள் 15 லட்சம் வரை அபராதம் விதிக்கின்றனர் .
இன்னும் சில இடங்களில் சிறு கடைகளுக்கும் வீடுகளுக்கும்கூட அபராதம் விதிக்கபடுகின்றது . அபராதம் விதிப்பது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமை என்ற போதிலும் அவர்களுக்கு அதற்கான தார்மீக உரிமை இருக்கின்றதா என தெரியவில்லை .
நல்ல ஆட்சியர் என்றால் டெங்கு பரவுவதற்கு முன்பாகவே இந்த நடவெடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் .
அதுபோகட்டும் , வேளச்சேரி உள்ளிட்ட அரசின் குப்பை கிடங்குகளில் இருந்து கொசு உற்பத்தி ஆகுமே அதற்கு என்ன தீர்வு ?
ஒவ்வொரு மாவட்டத்திலும் குப்பை மேலாண்மை ஒழுங்காக செயல்படுகிறதா ?
அபராதம் விதிப்பது விளிப்புணர்வை ஏற்படுத்துவதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் .