Site icon பாமரன் கருத்து

மாடுகளை கொன்றால் மரண தண்டணை . சரியா ?

மாடுகளை கொன்றால் மரண தண்டணை . சரியா ?

இந்தியாவில் பாஜக ஆளும் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கான  தடை வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ மக்களிடம் திணிக்கப்பட்டு வருகின்றது .

தற்போது குஜராத்தில் மாடுகளை கொன்றால் ஆயுள்தண்டனை விதிக்கபடும் அளவிற்கு விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் மாற்றத்தினை கொண்டு வந்துள்ளனர் .

சத்தீஸ்கர் முதல்வர் ஒருபடி மேலே சென்று மாடுகளை கொல்வோருக்கு மரண தண்டணை விதிக்கப்படும் ..அதற்கான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என கூறியுள்ளார் .

தற்போது உத்திரபிரதேசத்தில் பதவி ஏற்ற யோகி ஆதித்யநாத் கூட அங்கு மாட்டிறைச்சிக்கு தடை விதித்தார் . பின்பு முறையான அனுமதி பெற்று நடத்திக்கொள்ளலாம் என சொல்லப்பட்டது .

சரியா ?

உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில்  இந்தியா முன்னணி நாடாக இருக்கும் வேளையில்  இந்தியாவிற்குள் உள்ளே உள்ள மக்களுக்கு தடை என்பது சரியல்ல .

மாடுகளை அது ஒரு விலங்கினம் என்கிற அடிப்டையில் பாதுகாக்க முயல்வது நல்ல விஷயமே .

ஆனால் உணவு பொருளாக பயன்படுத்தபட்டு வந்த மாட்டிறைச்சியை இனி சாப்பிட கூடாது என உத்தரவு போடுவது எப்படி சரியாகும் ?

மாடுகளை தெய்வமாக கருதுவது என்பது அவர் அவரின் சொந்த கருத்துகளை பொருத்தது ஆனால் அந்த கருத்தினை சட்டத்தின் மூலமாகவும் அதிகாரத்தின் மூலமாகவும் திணிப்பது என்பது இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் கொடுத்துள்ள உரிமைகளை பறிப்பதாக அமையும் .

இந்தியா மத சார்பற்ற நாடு என்று சொல்லிகொள்ளும் நாமே இவ்வாறு சில மத நம்பிக்கைகளை திணிப்பது என்பது மதத்திற்கும் அரசியல் அமைப்பிற்கும் செய்யும் துரோகமே .

முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதி கட்ஜு அவர்கள் பலமுறை கூறிவிட்டார் மாட்டிறைச்சி சாப்பிட கூடாது என்று எவராலும் உத்தரவிட முடியாதென்று . ஆனாலும் பல மாநில அரசாங்கங்கள் அதற்கு எதிராக நடந்து கொல்கின்றன .

என்ன செய்யலாம் : 

இந்திய அரசியலமைப்பு ஒவ்வொரு குடிமகனுக்கு வழங்கியுள்ள விரும்பியதை உண்ணலாம் என்கிற உரிமையை பறிக்க கூடாது .

அதேநேரத்தில் முறையாக நடத்தப்படாத
பசு வதைக்கூடங்களை தடை செய்து முறைப்படுத்தப்பட்ட இறைச்சி நிறுவனங்களை நடத்திட முன்வர வேண்டும் .

இது அனைத்து மதத்தினருக்கான நாடு என்பதை உறுதி செய்ய வேண்டும் .

நன்றி
பாமரன்

Share with your friends !
Exit mobile version