Site icon பாமரன் கருத்து

Breast Cancer – Prevention, Symptoms, Cure – Awareness | Tamil | – மார்பக புற்றுநோய் – கண்டறிவது தடுப்பது எப்படி ?

 


 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் Breast Cancer அதாவது மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதமாக  கடைபிடிக்கப்படுகிறது . உலகம் முழுமைக்கும் 2018 இல் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் புதிதாகவே பாதிக்கப்பட்டுள்ளனர் . இவர்களில் 40000 க்கும் அதிகமான பெண்கள் மரணத்தை தழுவுவதாகவும் கூறப்படுகின்றது . நோயை ஆரம்பகாலத்திலேயே அறிந்துகொள்ளாமல் போவதினால் தான் இறப்பு விகிதம் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகின்றது .

 

மார்பக புற்றுநோய் -புள்ளிவிவரம்


மார்பக புற்றுநோய் என்றால் என்ன ? மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள் என்ன ? மார்பக புற்றுநோயை எவ்வாறு கண்டறிவது ? என்பது போன்ற கேள்விகளுக்கு பதிலை அறிந்துகொள்வோம் . உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு தெரியப்படுத்துங்கள் . இறப்பு விகிதத்தை குறைத்திடுங்கள் .

 

விரைவாக நோய்ப்பாதிப்பை கண்டறிவதே சிறந்தது

 




What is Breast Cancer? | மார்பக புற்றுநோய் என்றால் என்ன?

 

புற்றுநோய் என்பது பலவகைப்படும் , உடலின் குறிப்பிட்ட பகுதியில்   குறைபாடுகளுடன் கூடிய செல்களோ அசாதாரணமான செல்களோ உருவாகி ஏற்கனவே இருக்கின்ற நல்ல செல்களை அழித்துவிட்டு அவை பெருகுவதுதான் புற்றுநோய் எனப்படும் . மார்பகத்தின் செல்களில் தொடங்கி  உடல்முழுமைக்கும் பரவுகின்ற புற்றுநோய் மார்பக புற்றுநோய் என அழைக்கப்படுகிறது .

 


 

மார்பக புற்றுநோய் ஏற்பட காரணம் என்ன ?

 

புற்றுநோய் திசுக்களை  உருவாக்கக்கூடிய அடிப்படை செல்களில் உருவாகிறது . இந்த திசுக்கள் மார்பகம் மற்றும் உடலின் பல பகுதிகளிலும் இருக்கின்றது . ஆகவே அங்கெல்லாம் புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன . புதிய செல்கள்  உருவாகும்போது தேவையில்லாத பழைய செல்கள் அல்லது பாதிக்கபட்ட செல்கள் தானாக அழிந்துபோகும் , அதுதான் சரியான உடலியல்பு . ஆனால் சில சமயங்களில் பழைய செல்கள் அல்லது பாதிக்கபட்ட செல்கள் தானாக அழியாமல் போகும் , இதுபோன்ற சூழ்நிலையில் உருவாகும் திசுக்களை கட்டி அல்லது டியூமர் என அழைக்கிறார்கள் .

 

மார்பக புற்றுநோயின் நான்கு நிலைகள்

 

 

மார்பகத்தில் இதுபோன்ற கட்டி அல்லது டியூமர் உருவாகும்போது மார்பக புற்றுநோய் என அழைக்கப்படுகிறது . அப்படி உருவாகிடும் செல்கள் உடலின் பல பகுதிகளுக்கும் பரவி அங்கும் பாதிப்பினை ஏற்படுத்திட ஆரம்பிக்கும் .

 

ஆண்களை விட பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்பட்ட வாய்ப்புகள் அதிகம் .

வயது ஆக ஆக மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் .

குறிபிட்ட சூழலில் வாழுகின்ற பெண்கள் அனைவருக்கும் மார்பக புற்றுநோய் வருமா என்றால் , வராது . காரணம் மார்பக புற்றுநோய் ஒவ்வொருவரின் ஜெனிட்டிக் மற்றும் வாழ்வியல் முறைகளை சார்ந்தே  வருகின்றது .

 




முன் எச்சரிக்கையோடு இருப்பது எப்படி ?



மார்பக புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன . ஜெனிடிக் , வாழ்வியல் முறை , பழக்கவழக்கங்கள் என பல காரணங்கள் இருக்கின்றன .

ஜெனிடிக் , வயதாகுதல் என்ற இரண்டையும் நம்மால் மாற்றிட இயலாது என்பதனால் அடுத்த முக்கிய காரணியான வாழ்வியல் முறையை மாற்றிடுவதன் மூலமாக வராமல் தடுக்கலாம்  .

 

ஆல்கஹால் உட்கொள்ளும் பழக்கத்தை கைவிடுவது , சத்தான உணவு உண்ணும் பழக்கத்தை மேற்கொள்ளுவது , உடற்பயற்சி செய்வது போன்றவற்றினால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பினை குறைக்கலாம் , ஆனால் வராது என்பதற்கான உத்திரவாதம் இல்லை என்றே நிபுணர்கள் கூறுகிறார்கள் .

 

 

 

மார்பக புற்றுநோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க ஒரேவழி ஆரம்பகட்டத்திலேயே நோயினை கண்டறிந்து சிகிக்சை பெறுவதுதான் .

மார்பக புற்றுநோயை கண்டறிய மோமோக்ராபி என்னும் டெஸ்ட் இருக்கின்றது . இந்த X Ray டெஸ்ட் மூலமாக ஆரம்பநிலையிலேயே நோய் பாதிப்பை அறிய முடியும் . ஓராண்டுக்கு ஒருமுறையாவது இந்த டெஸ்ட் செய்வது நல்லது .

 

40 வயதினை கடந்த பெண்கள் இந்த பரிசோதனையை  ஆண்டுக்கு ஒருமுறை செய்துகொள்வது நல்லது

உங்களுடைய அம்மாவிற்கோ , உடன் பிறந்தவர்களுக்கோ மார்பக புற்றுநோய் வந்திருப்பேன் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் .

12 வயதுக்கு முன்பாகவே மாதவிடாய் அடைபவர்கள் , 55 வயதுக்கு பிறகும் மாதவிடாய் தொடரும் பெண்கள் , குழந்தையே இல்லாத பெண்கள் ஆகியோருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமிருக்கின்றன .


மார்பகப்புற்றுநோய் வந்தவர்களுக்கு இதற்காகத்தான் இவர்களுக்கு இந்த புற்றுநோய் வந்ததென பெரும்பாலான நேரங்களில் கண்டறியமுடிவதில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் . ஆக யாருக்கு எப்போது வேண்டுமானலும் இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன . ஆகவே முறையான மருத்துவ சோதனைகளை செய்துகொண்டு ஆரம்பகாலத்திலேயே கண்டறிவதன் மூலமாக உயிரிழப்புகளை தவிர்க்கலாம் .

உங்களுக்கு பிரியமான பெண்களுக்கு தவறாமல் பகிருங்கள் .

இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை ஓர் அறிமுகமே , முழு தகவலை பெற சரியான மருத்துவர்களை அணுகிடுங்கள் .


 

பாமரன் கருத்து

 

Share with your friends !
Exit mobile version