Site icon பாமரன் கருத்து

Rajini | Cauvery Issue | ரஜினிக்காக காவிரி பிரச்சனையை தள்ளிப்போடுகிறதா மத்திய அரசு – உண்மையா ?

அண்மையில் “ரஜினி அவர்களை நிஜ நாயகனாக்கிடவே மத்தியில் ஆளுகின்ற பாஜக காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதை தள்ளிபோடுவதாக” செய்திகள் பரவுகின்றன. இது உண்மையாக இருக்கலாம் என்பதற்கும் அல்லது யாரேனும் கிளப்பிவிட்ட வதந்தியா என்பதற்கும் பல காரணங்கள் இருக்கின்றன.

ரஜினியும் பாஜகவும் :

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என சொன்னவுடன் பாஜவிடமிருந்து மிக பெரிய ஆதரவு கிளம்பியது. ரஜினிக்கு ஆதரவு தெரிவித்த பாஜகவினர் கமல் அரசியலுக்கு வருகிறேன் என்றவுடன் எதிர்ப்பை காட்டினர்.

அதுதான் தமிழக மக்களுக்கு “ரஜினியை பாஜக இயக்குகிறதா ?” என்கிற அச்சத்தை ஏற்படுத்தியது . அதற்கேற்றார் போல பாஜகவை விமர்சிக்காமல் ரஜினியும் ரஜினிக்கு ஆதரவாக பாஜவினரும் செயல்படுகின்றனர் .

 

ரஜினி – காவேரி :

 

ரஜினி தமிழகத்திற்கு ஆதரவாக நடந்த திரையுலக நடிகர்கள் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளார் . ஆனால் தனிபட்ட வகையில் கருத்து சொல்வதையோ போராட்டம் நடத்துவதையோ மேற்கொள்ளவில்லை .

தற்போது அளித்துள்ள செய்தி குறிப்பில் ” காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே முக்கிய விசயம் மற்றும் தீர்வு ” என பேசியுள்ளார் .

 

அரசியல்வாதி – ரஜினி :

 

பொறுமையாக அரசியலுக்கு வந்த ரஜினி மிக பொறுமையாகவே கட்சி பணிகளையும் செய்து வருகின்றார் .

படத்தில் பல ஸ்டண்ட் செய்து மிக பிரபலமடைந்த ரஜினிக்கு அரசியலில் அப்படிபட்ட ஸ்டண்ட் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை .

ஒருவேளை பாஜகவின் ஆதரவு அவருக்கு இருப்பது உண்மையானால் காவிரி விவகாரத்தில் ரஜினியை வெற்றி நாயகனாக மாற்றிட ஒரு ஸ்டண்ட் பாஜாகாவால் மேற்கொள்ளப்படலாம் .

தற்போதெல்லாம் அரசியலில் தொழில் நுட்பங்களின் பங்களிப்பும் , தங்களுக்கான புதிய தலைவரை உருவாக்குவதற்கான செயல்முறைகளும் பெரிய அரசியல் கட்சிகளால் கடைபிடிக்கப்படுகின்றன என்பதை மறுக்க முடியாது .

பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலம் தாழ்த்துவது கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்காக என்றாலும் அதையே பயன்படுத்தி ரஜினியின் ஆதரவை பெருக்கிடவும் எண்ணலாம் . ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க பாஜக எண்ணுவதில் ஆச்சர்யம் இருக்காது .

 

தமிழகத்தில் அவரது அரசியல் பிரவேசத்திற்கு பெரும்பான்மையாக எதிர்ப்பு வர காரணம் பாஜக தான் அவரை இயக்குகின்றது என்ற ஒற்றை காரணம் மட்டுமே . அதை ரஜினி உணர்ந்தும் இருக்கிறார் . ஆனால் வெளிப்படையாக சொல்லாமல் தவிர்க்கிறார் .

பாஜகவின் ஆதரவு தனக்கில்லை என்பதை ரஜினியை தவிர வேறொருவரால் சொல்ல முடியாது .

சொல்வாரா ?

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version