அமைதியான , நாள் முழுவதும் உழைக்க கூடிய , நுண்ணறிவு பெற்ற , சிறந்த உழைப்பாளி ஜே டே
– நண்பர்கள்
பெயர் : ஜே டே (Jyotirmoy Dey Or J Dey)
பணி : புலனாய்வு பத்திரிக்கையாளர் (Crime and Investigative Journalist)
நிறுவனங்கள் :Afternoon Despatch & Courier, Mid-Day ,Indian Express
எழுதிய புத்தகங்கள் : காலாஸ் மற்றும் ஜீரோ டயல் (Khallas and Zero Dial)
மறைவு : 11 ஜூன் 2011
ஜூன் 11 2011 அன்று ஹிரனந்தனி ( போவாய் , மும்பை ) சாலை ஓரங்களில் நின்றவர்கள் மோட்டார் சைக்கிளில் செல்லும் நபர் ஒருவரை அடையாளம் தெரியாத கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை காண்கிறார்கள் .
சுட்டுக்கொல்லப்பட்டவர் ஜே டே (J Dey) , மிட் டே (Mid Day) பத்திரிக்கையில் மூத்த புலனாய்வு பத்திரிக்கையாளராக பணி புரிந்தவர் . மும்பை நிழல் உலக செயல்பாடுகள் குறித்த புலனாய்வில் நிபுணத்துவமும் தகவல்கள் அறிந்தவரும் ஜே டே .இவரைத்தான் ஏழு பேர் கொண்ட கும்பல் சுட்டு சாய்க்கிறது . அந்த கும்பல் சோட்டா ராஜன் என்பவருக்கு ஆதரவாக இந்த கொலையை செய்ததால் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார் சோட்டா ராஜன் .
J Dey ஆரம்பகால வாழ்க்கை :
Jyotirmoy Dey என்பது உண்மையான பெயராக இருந்தாலும் ஜே டே (J Dey) என்றே பத்திரிக்கை உலகில் பரவலாக அறியப்படுகிறார் .
தனது இளமைக்காலத்தில் பகுதிநேர பத்திரிக்கையாளராக Afternoon Despatch & Courier, Mid-Day ஆகியவற்றில் 1990 வாக்கில் பணியாற்றியுள்ளார் . தொடக்க காலத்தில் காடுகளில் நடைபெரும் அத்துமீறல்கள் (Forest Encroachment) குறித்தும் , மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உள்ள முரண்பாடு அல்லது மோதல் (Man animal Conflict) குறித்தும் எழுதி வந்தார் .
புலனாய்வு பத்திரிக்கையாளராக ஜே டே :
1996 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் புலனாய்வு நிருபராக பணியில் சேர்ந்தார் . பிறகு மீண்டும் மிட் டே பத்திரிகையில் கிரைம் மற்றும் இன்வஸ்டிகேட் ரிப்போர்ட்டராக சேர்ந்தார் .
அமைதியான , நாள் முழுவதும் உழைக்க கூடிய , நுண்ணறிவு பெற்ற , சிறந்த உழைப்பாளி ஜே டே
– நண்பர்கள்
இவரது கொலையில் குற்றவாளியாக இருக்க கூடிய பிரபல ரௌடியான சோட்டா ராஜன் குறித்து தொடர்ச்சியாக பல கட்டுரைகளையும் புலனாய்வு தகவல்களையும் வெளியிட்டுவந்தார் ஜே டே .
இதுதவிர மஹாராஷ்டிராவில் நடைபெரும் எண்ணெய் ஊழல் குறித்தும் பல தகவல்களை வெளிக்கொண்டுவந்தார் . மேலும் போலீஸ் அதிகாரிகளின் தொடர்பு குறித்தும் அவர் உண்மையை வெளிக்கொண்டு வந்தார் .
- குறிப்பாக நாம் நினைப்பதைப்போல சோட்டா ராஜன் உண்மையாலுமே ஆற்றல் மிக்க நபர் அல்ல எனவும், அவரையும் குடும்பத்தையும் சொத்துக்களையும் காப்பதற்காக போலியான முகத்திரையுடன் சோட்டாராஜன் இருப்பதாகவும் ஜே டே வெளியிட இருந்த தகவல்களே அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிட்டது என்கிறார்கள் .
சோட்டாராஜன் விசாரனையின்போது “அவர் எனக்கு எதிராக கட்டுரைகள் எழுதிக்கொண்டே இருந்தார் . என்னுடைய குழு வலுவற்று போய்விட்டதாகவும் , நம்பிக்கைக்கு உரியவர்கள் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாகவும் எழுதினார் . ஆகையால் இவர் தாவுத் இப்ராஹிம் க்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றெண்ணி அவரை கொலை செய்துவிட்டேன் என்றார் “.
மக்களுக்காக உழைத்திடும் உண்மையை வெளிக்கொண்டுவரும் பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவது ஆபத்தானது . இதனை கண்டிப்பதோடு அரசு இதற்கு முடிவினை கொண்டுவர வேண்டும் .
பாமரன் கருத்து