Site icon பாமரன் கருத்து

வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே – பாரதியார் கவிதைகள்


வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!
நெற்றி யொற்றைக் கண்ணானோடே நிர்த்தனம் செய்தாள்
நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

ஊருக்கு நல்லது சொல்வேன் – என்க்
குண்மை தெரிந்தது சொல்வேன்
சீருக் கெல்லாம் முதலாகும் – ஒரு
தெய்வம் துணைசெய்ய வேண்டும்

வேத மறிந்தவன் பார்ப்பான், பல
வித்தை தெரிந்தவன் பார்ப்பான்
நீதி நிலைத்தவ றாமல் – தண்ட
நெமங்கள் செய்பவன் நாய்க்கன்

பண்டங்கள் விற்பவன் செட்டி – பிறை
பட்டினி தீர்ப்பவன் செட்டி
தொண்டரென் றோர்வகுப் பில்லை – தொழில்
சோம்பலைப் போல்இழி வில்லை

நாலு வகுப்புமிங் கொன்றே – இந்த
நான்கினில் ஒன்று குறைந்தால்
வேலை தவறிச் சிதைந்தே – செத்து
வீழ்ந்திடும் மானிடச் சாதி

ஒற்றைக் குடும்பந் தனிலே – பொருள்
ஓங்க வளர்ப்பவன் தந்தை
மற்றை கருமங்கள் செய்தே – மனை
வாழ்ந்திடச் செய்பவள் அன்னை

ஏவல்கள் செய்பவள் மக்கள்! – இவர்
யாவரும் ஓர்குலம் அன்றோ?
மேவி அனைவரும் ஒன்றாய் – நல்ல
வீடு நடத்துதல் கண்டோம்

சாதிப் பிரிவுகள் சொல்லி – அன்பு
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார்
நீதிப் பிரிவுகள் செய்வார் – அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார்

சாதிப் கொடுமைகள் வேண்டாம் – அன்பு
தன்னில் செழித்திடும் வையம்
ஆதர வுற்றிங்கு வாழ்வோம் – தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
பேணி வளர்த்திடும் ஈசன்
மண்ணுக் குள்ளே சிலமூடர் – நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்

கண்கள் இரண்டில் ஒன்றைக் – குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் – வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்

பாரதியார்


மேலும் பல பாரதியார் கவிதைகள் படிக்க Click Here

Share with your friends !
Exit mobile version