Site icon பாமரன் கருத்து

நதிகள் மீட்பு இயக்கம் -சத்குரு சாமியாரா ? முதலாளியா ?

இந்த திட்டதின்படி இவர்கள் செய்ய இருப்பதாகச் சொல்வது  நதிநீர் இணைப்பு இல்லை ….

தற்போது இருக்ககூடிய நதிகளின் கரைகளின் இருபுறமும் சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு பழ மரங்கள் உள்ளிட்டவை நடப்படும் .

அந்ததந்த பகுதிகளில் பழங்களை சேகரிக்கும் நிலையங்களும் அதிலிருந்து பானம் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களை உற்பத்தி செய்யகூடிய நிறுவனங்களும் ஏற்படுத்தப்படும் .

மக்கள் தங்கள் நிலங்களில் விளைவிக்கப்பட்ட பழங்களை அவர்களிடம் விற்கப்படும் .

பழக்கன்றுகள் நடுவது பராமரிப்பது போன்றவற்றிற்கு ஒப்பந்தம் போடப்படும் .

இதன் மூலமாக மக்களின் வருவாய் உயரும் …

நமது கேள்விகள் :

என் நிலத்தில் என்ன பயிரிட வேண்டும் என்பது என் உரிமை நான் எதற்காக உங்களுக்கு கட்டுப்பட வேண்டும் ?

நதிகளை பாதுக்காக்க வேண்டிய அமைச்சர்கள் , ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டவருடன் இணைந்து தான் நதிகளை காப்பாற்றிட முடியும் என எண்ணுவது சரியா ?

நதிகளின் இருபுறமும் நல்ல நீர்ப்பாசன வசதி கொண்ட நிலத்தில் பண முதலாளிகளின் நிறுவனங்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முயலுவது அபத்தம்  இல்லையா ?

எத்தனை ஏக்கர் நிலங்களை இதனால இழக்க நேரிடும் ?

பாமரன்

Share with your friends !
Exit mobile version