வங்கிகளில் நாம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போதும் வங்கிகள் நமக்கு ஏதேனும் அலெர்ட்களை அனுப்பிடும்போதும் text message மூலமாகவே நமக்கு தகவல்கள் அனுப்பப்டும் . இனி அந்த மெசேஜ்களை வாட்ஸ்ஆப் (What’sApp) மூலமாக அனுப்பலாமா என வங்கிகள் ஆராய தொடங்கியிருக்கின்றன .விரைவில் அதுவும் நடக்கும்.
Now Banks send alerts via message, email if you given
தற்போது இருக்கக்கூடிய நடைமுறைப்படி அனைத்து தகவல்களும் கணக்கு வைத்திருப்பவரின் மொபைல் எண்ணுக்கு text message ஆக அனுப்படும் . மின்னஞ்சலை வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் அதன் மூலமாகவும் தகவல் அனுப்பபடும் .
இந்தியாவில் வங்கிகளை ஒழுங்குபடுத்துகிற RBI இன் விதிகளின்படி இன்றளவும் வாடிக்கையாளர்களுக்கு சாதாரண text message மூலமாக தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயம்.
இனி வரும் காலங்களில் whatsapp மூலமாக அனுப்பினால் மட்டும் போதும் என வாடிக்கையாளர் வங்கிகளிடம் தெரிவித்தால் வங்கிகளும் What’sApp மூலமாக தகவல்களை அனுப்பிட துவங்கலாம் .
சரி இவ்வாறு What’sAp மூலமாக அனுப்புவதனால் ஏற்படக்கூடிய நன்மை மற்றும் குறைபாடுகளை காண்போம்
Advantages over Bank alerts via What’sApp :
தற்போது அனைவரும் whatsapp பயன்படுத்த ஆரம்பித்துவிட்டோம் . இதனால் மொபைல் மெசேஜ் பாக்ஸை (Text Message Box) பலர் திறப்பது கூட கிடையாது . இனி வங்கி அலெர்ட் ஐ தவறாமல் பார்க்க வாய்ப்பிருக்கின்றது .
WhatsApp முற்றிலும் இலவசமான ஒன்றாக இருப்பதினால் மெசேஜ் சேவைக்காக வங்கிகள் செலவளிக்க வேண்டியது இல்லை .
வங்கிகள் What’sApp நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு “integration ” மூலமாக நாமும் இலவசமாகவே வங்கி இருப்பு (Bank Balance) , மாதாந்திர கணக்கு (Recent Transactions) உள்ளிட்டவற்றிற்கு request அனுப்பி பெற முடியும் .
அனைத்திற்கும் மேலாக What’sApp முழு end to end encryption ஐ கொண்டிருப்பதனால் வங்கி அனுப்பக்கூடிய OTP உள்ளிட்டவற்றை இடைமறித்து எவராலும் பார்க்க முடியாது .
Disadvantages of Bank alerts via What’sApp :
Whatsapp பயன்படுத்திட இணைய சேவை முக்கியம் என்பது மிக முக்கியமான குறைபாடு
Whatsapp பயன்படுத்திட ஆண்ட்ராய்டு (Android) அல்லது ios போன்ற மொபைல்களை வைத்திருப்பதும் கட்டாயமாகிறது .
வாட்ஸ்ஆப் எவ்வளவு பாதுகாப்பானதாக இருந்தாலும் அதுவும் ஒரு மூன்றாம் நபருடைய நிறுவனம் (Third Party Company) என்பதை மறக்க கூடாது .
************************************
ஏற்கனவே சீனாவில் இருக்கக்கூடிய வங்கிகள் Whatsapp சேவையை பயன்படுத்தி வருகின்றன . தொழில்நுட்பம் வளர்ந்துவருகிற சூழ்நிலையில் Whatsapp சேவையை பயன்படுத்திக்கொள்வது நல்ல விசயம் தான் .
Whatsapp போன்றவற்றை நாம் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்துவிட்டால் one way communication என்பது two way communication ஆக மாறிவிடும் . இதனால் வங்கிகளுக்கு மெசேஜ் அனுப்பி எளிமையாக தகவல்களை நம்மாலும் பெற முடியும் , இலவசமாக.
Pamaran Karuthu