Site icon பாமரன் கருத்து

அவள் பெயர் தெரியவில்லை …

அதுவொரு மாலைவேளை …..
சுண்டல் விற்கும் சிறுவனை தவிர்த்து அனைவருமே  ஜோடிகள் தான் …கடற்கரை மணலில் காதல்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறார்கள் . அதை தகர்க்க அப்பாக்களைப்போல அலை முயன்றுகொண்டிருக்கிறது .
அதிசயமாய் இன்னொருத்தியும் தனியாக அமர்ந்திருக்கிறாள் . தென்றலில் அசையும் பூக்களைப்போல அவள் உதடுகள் அசைந்து முணுமுணுத்தன . இடது கையில்  மாட்டிக்கொண்ட செல்பேசியை தன் காலில் மெல்ல அடித்துக்கொண்டிருந்தாள் .வலது கரம் மணலில் கிறுக்கிக்கொண்டு இருக்கின்றது .
அலையின் ஓசை  இவளது காதுகளின் தோடுகளோடு உயிரிழந்து போயின போல . எதுவும் அவள் காதுகளில் பாயவில்லை . திடீரென்று எழுந்தவள்  கண்களை துடைத்துக்கொண்டு வேகமாய் சாலைப்புறத்தை நோக்கி நடந்தால் …
காதலன் வராமல் போயிருக்கலாம் இல்லையென்றால் காதல் தோல்வியாக இருக்கும் இதுதானே  இவர்களுக்கு வேலை என எண்ணி நானும் புறப்பட முயன்றேன் …
காதல் தோல்வியா அல்லது காத்திருப்பா , ஒரே குழப்பம் .
சரி வரைந்ததை பார்த்தால் ஒரு முடிவு கிடைக்கலாம் என்று அவள் அமர்திருந்த இடம் நோக்கி நடந்தேன்  …
பார்த்தேன் …
தலை குனிந்தேன் …
அவள் வரைந்திருந்தது ‘ஸ்டெதஸ்க்கோப் ‘….
இதயம் வலித்தது
தவறாக எண்ணிவிட்டோமே என்று ..
மருத்துவம் படிக்க துடித்து கொண்டிருக்கும் மாணவி அவள் என்று உணர்ந்தேன் …கடல் காதலர்களுக்கு மட்டுமல்ல மாணவர்களுக்கும் ஆறுதல் கொடுக்கும் என உணர்ந்தேன் …
நீட் தேர்வு குழப்பங்கள் நீங்கட்டும் .
ஸ்ரீ

Share with your friends !
Exit mobile version