ஒரு அறிவார்ந்த சமூகத்தில் சிறைக்குள் இருக்க வேண்டியவர்கள் யார்? குற்றம் செய்தவர்கள் தான் . ஆனால் தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளிலும் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களின் சிலைகளும் சிறைக்குள் தான் இருக்கின்றன . இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் .
கடவுள் சிலையோ அல்லது எந்த தலைவரின் சிலையோ எதுவாக இருந்தாலும் அவற்றின் மீது நன்மதிப்பு கொண்டிருக்கின்ற மக்கள் இருக்கின்ற சூழ்நிலையில் சிலைகளின் மீது தாக்குதல் நடத்தி இழிவு படுத்த முயல்வது என்பது மூடத்தனமன்றி வேறில்லை .
பெரியார் சிலை உடைப்பு
அண்மையில் அதிகப்படியான தாக்குதலுக்கு உள்ளான சிலையாக இருப்பது ‘பெரியார் சிலை’. பிற்படுத்தப்பட்ட மக்களின் நிலைக்காகவும் சாதிய ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டு கிடந்த மக்களின் நிலைக்காகவும் சமையலறையில் முடங்கி கிடந்த பெண்களின் நிலைக்காகவும் குரல் கொடுத்தவர் பெரியார் . அவர் ஆரம்பித்த அந்த போராட்டத்தின் விளைவாகத்தான் தமிழகம் இன்று சமூக பண்பாட்டில் உயர்ந்து நிற்கின்றது . பெண்களின் முன்னேற்றதில் செழித்து வளர்ந்துகொண்டிருக்கிறது .
பெரியார் அவர்களை போன்றே நம் மக்களுக்காக போராடிய தலைவர்கள் கோடி பேர் . அவர்களில் சிலருக்கு சிலைகள் வைக்கப்பட்டிருக்கிறது . பிற்காலங்களில் அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது கொள்கை வேறுபாடு காரணங்களுக்காகவோ சிலைகளை உடைப்பது , செருப்பு அணிவிப்பது என்பது எப்படி சரியாகும் ?
மனித இலக்கணம் என்ன ?
அடுத்தவர் தாயை மதிக்காதவன் தன் தாயை உண்மையாகவே மதிக்க மாட்டான்
ஆம் அடுத்தவரின் மதத்தினை மதிக்காதவனால் எப்படி தன் மதத்தினை மதிக்க முடியும் ? அடுத்த தலைவர்களை மதிக்க முடியாதவனால் எப்படி தன் தலைவர்களை மதிக்க முடியும் ? இவை உங்களின் விழிகளை திறக்கவைக்கப்போகும் கேள்விகள் . ஆகவே நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் .
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
தங்களை அடுத்தவர் மதிக்கவேண்டும் என நினைத்தால் அடுத்தவரை நீங்கள் மதிக்க பழகுங்கள்
எதிரெதிர் கொள்கைகளை உடையவர்களை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் .
ஆரோக்கியமான விமர்சனங்களை வைத்திடுங்கள்
பெரியார் அவர்கள் மட்டும் பிள்ளையார் சிலையை உடைக்கலாமா ? என்பவை ஆரோக்கியமான கேள்விகள்
பாமரன் கருத்து