Site icon பாமரன் கருத்து

ரஜினி மக்கள் மன்ற சட்ட விதிகள் படிச்சீங்களா? ஆதரவை கூட்டுமா? | Are you read rajini makkal mandram rule book?

 

வாசகர் கட்டுரை : வினோத்குமார்

 

ஸ்டாலின் ஒருமனதாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . கமல் , பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களை சந்திக்கிறார். தினகரன் கூட, அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கிறார். ஆளுங்கட்சியும் வழக்கம்போல மேடைகளில் ஏதாவது உளறி தாங்கள் ஆட்சி செய்வதாக கூறிக்கொள்கின்றனர். ஆனால் , ஒருவரைப்பற்றி மட்டும் எந்தவொரு செய்தியும் காணவில்லை.

 

போராட்டம் செய்தால் நாடே சுடுகாடாயிடும் , ஒருநிமிடம் அப்படியே
தலை சுத்திடுச்சு’னு எதாவது சொன்னாலும் , பாஜகவின் கைக்கூழி அப்படிதான் பேசுவாரென சமூகவலைதளங்களில் வசை வாங்குவதுதான் மிச்சம்.

 

ரஜினி மக்கள் மன்ற சட்ட விதிகள்

 

“சினிமாவில் ஜொலித்தவர் அரசியலில் இப்படி ஜோக்கர் ஆயிட்டாரே” என எண்ணிக்கொண்டிருக்கும்போது , ரஜினி மக்கள் மன்றத்தின் சட்டவிதிகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது. அவற்றில் சில சட்டவிதிகள் பாராட்டும்வகையில் இருந்தது. அவற்றுள் முக்கியமாக, இளைஞர் அணியில் 35 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே இருக்கவேண்டும் , கட்சியின் கொடியை நிரந்தரமாக வாகனங்களில் பொருத்தக்கூடாது, கட்சிக்கொடி துணிகளால் மட்டுமே தயாரிக்கவேண்டும், பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் தயாரிக்கக்கூடாது , குடும்பத்தில் ஒருவர் மட்டுமே கட்சி பொறுப்புகளில் இருக்கமுடியும் , ஜாதி சங்கங்களில் இருப்பவர்கள் கட்சியில் இருக்கக்கூடாது முதலியன.

 

இளைஞர் அணியில் 35 வயதிற்குட்பட்டவர்கள்

 

35 வயதுக்கு உட்பட்டவரே இளைஞர் அணியில் இருக்க முடியும்

 

சில கட்சிகளில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களும் இளைஞர் அணியில் பொறுப்புகளில் உள்ளனர் . இதனால் , இன்றைய இளைஞர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மற்றும் திறன்களை கட்சியில் கொண்டுசேர்க்க முடியவில்லை. ரஜினி அவர்களின் இந்த விதி ஏற்றுக்கொள்ளக்கூடியது.

 

கட்சிக்கொடியின் விதிகள்

 

கட்சி கொடியை பயன்படுத்தும் விதி

 

1) கட்சியின் கொடியை நிரந்தரமாக பொருத்தக்கூடாது: சில கட்சியினர் பொது இடங்களில் கொடியை காட்டி தங்களது அதிகாரத்தை பொதுமக்களிடம் காட்டுகின்றனர். இதனால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புண்டு. எனவேதான் கட்சிக்கொடியை கட்சி கூட்டங்களிலும் , கட்சி பணிகளின்போது மட்டும் பயன்படுத்த சொல்கிறார் போலும்.

 

2) கட்சிக்கொடி துணிகளால் மட்டுமே தயாரிக்கவேண்டும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பொருட்களால் தயாரிக்கக்கூடாது.

 

குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கட்சி பொறுப்பு

 

கட்சி பதவிக்கான விதிமுறை

 

வாரிசு அரசியல் மற்றும் குடும்ப அரசியல் ஆதிக்கத்தை தடுக்க ஒருவிதமான முயற்சி எனக்கூறலாம். இந்தவிதி, ரஜினிக்கும் பொருந்தும். ஆனால் , இந்த விதியை ரஜினி அவர்கள் கடைபிடிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் .

 

ஜாதி சங்கங்களிலோ அல்லது அமைப்பிலோ இருப்பவர்களுக்கு கட்சியில் அனுமதியில்லை:

 

அனைத்து கட்சிகளும் சாதிகள் இல்லை என்று சொன்னாலும் , ஏதோ ஒரு சாதிக்கட்சியுடன் கூட்டணி அமைத்துதான் ஆட்சியமைத்துள்ளனர் . கட்சி தொடங்குவதற்கு முன்பே, ரஜினி அவர்கள் கட்சியின் விதியில் “சாதி சங்கங்களில் இருப்பவர்களுக்கு கட்சியில் அனுமதியில்லை” எனக்கூறியிருப்பது இன்றய இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் .

 

மேற்கண்ட விதிகள் மட்டுமில்லாமல், இன்னும் பலவிதிகள் உள்ளன. இந்த விதிகள் மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதால் இவைகள் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சினிமாவில் தனக்கென தனியிடத்தை பிடித்த ரஜினி அவர்கள் அரசியலில் தனியிடத்தை பிடிப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம் …

 

நன்றி ,
க. வினோத்குமார்

 

***************************

 

பொறுப்பு துறப்பு : வாசகர் கட்டுரைகளில் வழங்கப்படும் கருத்துக்கள் அவர்களுடைய சொந்தக்கருத்துக்கள் . அதற்கு பாமரன் கருத்து பொறுப்பேற்காது . 

உங்களுடைய கட்டுரைகள் இடம்பெற வேண்டுமா எழுதி அனுப்புங்கள் 

Email :

admin@pamarankaruthu.com

pamarankaruthu@gmail.com

***************************

 

பாமரன் கருத்து 

முன்னனி கட்சிகளின் செயல்பாட்டில் இன்றைய இளைஞர்களுக்கு இருக்கின்ற அதிருப்தியை , கேள்வியை அடிப்படையாக கொண்டு அதற்கு தீர்வாக ரஜினி மக்கள் மன்றம் இருக்கின்றதென்று வலிமையாக சொல்வதாகவே தற்போது வெளியிடப்பட்டிருக்கக்கூடிய ரஜினி மக்கள் மன்ற விதிகள் அடங்கிய கையேட்டினை பார்க்கின்றேன் . 

இந்த கையேட்டில் விதிகள் மட்டுமல்லாது தங்கள் கட்சியின் நிலைப்பாட்டினையும் பல இடங்களில் தெரிவிக்க தவறவில்லை . 

உதாரணத்திற்கு மகளிர் அணியின் தேவை குறித்தும் கட்சியின் வளர்ச்சிக்கு பெண்களின் முக்கியதுவம் குறித்தும் மிக அழகாக கூறப்பட்டுள்ளது வரவேற்பிற்குரியது .

 

பெண்களின் முக்கியதுவத்தை உணர்த்தும் விதி

ரஜினி மக்கள் மன்றத்தின் நோக்கம் “சாதி மத பேதமற்ற நேர்மையான, வெளிப்படையான, தூய்மையான அரசியலை முன்னெடுத்து தனமலமற்ற பொது சேவைக்கு மன்ற உறுப்பினர்களை தயார் செய்வது ” 

இன்னும் பல விசயங்கள் குறித்து ரஜினி மக்கள் மன்ற விதிகளில் பேசப்பட்டுள்ளது . விதிகள் எப்படி கடைபிடிக்கப்படுகின்றன என்பதை பொறுத்தே அதன் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் . அதற்கு நாம் காத்திருக்க வேண்டும் . 

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version