எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய சிறந்த புத்தகங்களில் ஒன்று அறம் புத்தகம். இந்த புத்தகத்தில் 12 சிறந்த கதைகள் உள்ளன. அவை அனைத்துமே படிப்போரை நல்ல வழியில் பயணிக்க வைக்கும் மந்திர வார்த்தைகள் கொண்ட புத்தகம். ஒரு சிறந்த புத்தகத்தை படிக்க நினைக்கும் ஒவ்வொருவரும் வாங்கி படிக்க வேண்டிய புத்தகம் இது.
நூல் : அறம்
ஆசிரியர் : ஜெயமோகன்
பக்கம் :400
பதிப்பகம் : வம்சி
PDF லிங்க் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது
அறம் : சில கதைகளின் அறிமுகம்
அறம் : எழுத்தாளனுக்கு நேர்ந்த கொடுமையையும் அவர் கடைபிடித்த அறம் அவரை எப்படி காத்தது என்றும் இந்தக்கதையில் கூறப்பட்டுள்ளது. இந்தக்கதை இன்னமும் இனிமேலும் இந்த உலகில் அறம் இருந்துகொண்டு தான் உள்ளது என்பதற்கு இது ஓர் உதாரணம்.
வணங்கான் : சுருக்கமாக சொன்னால் ஒரு பண்பட்ட அரசு ஊழியரின் வாழ்க்கை, அவர் வாழ்க்கையில் எதிர்கொண்ட சவால்கள் எடுத்துக் கூறுகிறது. தன்னை ஒடுக்க நினைக்கும் கூட்டத்தை எப்படி ஒருவர் வென்றார் என விளக்கும் கதை இது.
யானை டாக்டர் : பெரிதாக அறிமுகம் தேவையில்லாத கதை நீங்கள் குறுங்கதையாக படித்து இருக்கலாம். அறமும் அர்ப்பணிப்பும் ,அன்பும் எல்லை இல்லாமல் கொட்டிக்கிடந்த டாக்டர் கே அவர்கள் தன் வாழ்க்கையை யானைகளுக்கு அர்ப்பணித்த அறத்தை மையமாகக் கொண்டுள்ளது.
சோற்றுகணக்கு : பெத்தேல் சாகிப் போன்று மனிதனும், அந்த உணவகத்தை போன்று உணவகங்களும் இருக்கும் பொருட்டு அரை வயிற்றுடன் யாரும் வாடமாட்டார்கள். தன் உயிரையும் விட மாட்டார்கள்.
நூறு நாற்காலிகள் : குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஒருவர் இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தாலும் கூட, தன் சமூகத்தின் பெயர் அறிந்த தன் கீழ் வேலை செய்யும் அரசு ஊழியர்களின் அலட்சியப் போக்கையும், இறுதிக்காலத்தில் தன் தாயை காக்க நினைப்பதும் ,அவருடன் இருந்த சிறு வயது நினைவுகளை அசைபோடுவதுமாக கதை நகர்கிறது. சாதிய கொடுமை எவ்வளவு உயர்ந்த பணிக்குப் போனாலும் தொடரும் என்பதற்கு இந்தக்கதை ஓர் உதாரணம்.
பெருவலி : கோமல் என்ற எழுத்தாளரின் வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதை.
ஒலைச்சிலுவை : சாமுவேல் என்ற மருத்துவரின் தொண்டை சொல்வதோடு, அவரின் அர்ப்பணிப்பு அறத்துடன் இணைத்து சொல்லப்பட்டுள்ளது,
(இதுவும்,நூற் நாற்காலிகள் கதையும் ‘தோட்டியின் மகன்’ கதை படித்தவர்களுக்கு நன்கு புரியும்)
மத்தறு தயிர் : ஆசிரியர் மற்றும் அவரின் மாணவர் பற்றிய கதை.. மிகச் சிறந்த மாணவன் ஒருவனின் வாழ்வில் ஏற்பட்ட நிகழ்வையும்,அதனால் அவன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தையும்,அதை கண்டு ஆசிரியர் பட்ட வேதனையையும் சொல்வதோடு,அந்த மாணவரின் ஆசிரியர் மீதான பக்தியையும் சொல்கிறது.
கோட்டி, தாயார் பாதம், மயில் கழுத்து, உலகம் யாவையும் போன்ற பல நல்ல கதைகள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.