Site icon பாமரன் கருத்து

“சாப்பாடு நல்லா இருந்துச்சு” என பாராட்டியிருக்கிறீர்களா கணவன்மார்களே

இன்று உங்கள் மனைவி சமைத்துக்கொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு கொண்டிருக்கும்போது ” நன்றாக இருக்கின்றதே ” என தோன்றினால் மறந்துபோகமால் ஒரு குறுஞ்செய்தியின் மூலமாகவோ ஒரு கால் மூலமாகவோ “இன்னைக்கு சாப்பாடு நல்லா இருந்துச்சுனு ” சின்னதா பாராட்டுங்க , இதுவரை செய்ய தவறி இருந்தால் இன்று செய்து பாருங்கள் .

 

 

திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான பெண்களின் உலகமாக  மாறிவிடுவது கணவன் மற்றும் பிள்ளைகள் தான் . அவர்களுக்கு வேண்டியதை செய்வதிலேயே பல பெண்களின் நாட்கள் ஓடுகின்றன . ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்காகவும்  பிள்ளைகளுக்காகவும் வாழ்வதையே விரும்புகிறார்கள் , மகிழ்கிறார்கள் . 

என்னதான் அவர்கள் விரும்பி ஏற்றுக்கொண்டாலும் இயல்பாக அவர்களும் மனிதத்தன்மை கொண்டவர்கள் தான் . ஒவ்வொரு மனிதனுக்கும் யாரிடமிருந்தாவது பாராட்டுதலை அங்கீகாரத்தை வாங்கிவிட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கும் . 

சின்ன பாராட்டு மிகப்பெரிய சந்தோசத்தை கொடுக்கும்

 

அலுவலகத்தில் பணி செய்யும்போது கூட எதையாவது சிறப்பாக செய்து உயர் அதிகாரியிடம் இருந்து பாராட்டுதலை பெற வேண்டும் என கடுமையாக உழைப்போம் அல்லவா .

 

 

இதே சின்ன எதிர்பார்ப்பு நிச்சயமாக ஒவ்வொரு மனைவிமார்களிடமும் இருக்கும் , அவர்கள் வெளிகாட்டிக்கொள்ளமாட்டார்கள் . ஆனால் அதனை எதிர்பார்ப்பார்கள் .
உங்களுக்காக உழைத்திடும் உங்கள் மனைவியின் எதிர்பார்ப்பை இன்று பூர்த்தி செய்திடலாமே ! 

செய்துபாருங்கள் நண்பர்களே !

 

பாமரன் கருத்து
Exit mobile version