Calzy 3 ஆப்க்காக Apple Design Awards விஜயராமன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
யாரும் எதிர்பாராத நேரத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் விருது வாங்கிய விஜயராமன் அவர்களே எதிர்பாராத தருணத்தில் அவரது பெயர் Apple Design Awards க்காக அழைக்கப்படுகிறது. ஆமாம் Apple Design Awards க்கான விருது வாங்கப்போகிறவர் விஜயராமன் என அவரது பெயரை அழைத்ததுமே நம்ப முடியாத சந்தோஷத்தில் மேடையேறி தனது Calzy 3 ஆப் க்காக இந்த விருதினை ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்கிறார் விஜயராமன்.
இந்த விருது பெற்ற முதல் இந்தியர், தமிழர் என்கிற பெருமையையும் பெற்று இருக்கிறார் விஜயராமன்
கால்குலேட்டர்க்கு (Calzy 3) இந்த Award டா என ஆச்சர்யப்படலாம் ?
ஆப்பிள் இயங்குதளத்தில் எத்தனையோ ஆப் கள் இருந்தாலும் இவரது Calzy 3 ஆப்பிற்கு கிடைத்திருப்பது மிகவும் ஆச்சர்யத்திற்கு உரியது. இதற்கான சிறப்பான காரணங்களையும் இந்த ஆப் கொண்டிருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் iOS பிளாட்பார்மில் மட்டுமே இயங்கக்கூடிய இவரது Calzy 3 ஆப்பின் விலை 159 ரூபாய், Mac கணினி முதல் ஆப்பிள் வாட்ச் வரை அனைத்து ஆப்பில் device களிலும் இயங்கும்.
சாதாரண கால்குலேட்டர் ஆப்பில் நாம் கணக்குகளை மட்டுமே செய்ய முடியும் ஆனால் இவரது Calzy 3 ஆப்பில் கணக்குகளை மட்டும்தான் செய்ய முடியும். ஆனால் அதோடு சேர்த்து பல சிறப்பம்சங்களை இவரது Calzy 3 ஆப் கொண்டிருக்கிறது.
Memory Area :
மற்ற கால்குலேட்டர் ஆப்பில் நாம் கணக்குகளை மேற்கொள்ள முடியும். ஆனால் இந்த Calzy 3 ஆப்பில் நீங்கள் செய்த கணக்குகளை சேமித்து வைக்க முடியும்.
மேலும் bookmarks, Drag & Drop option மற்றும் விடைகளை மற்ற ஆப்கள் மூலமாக பிறருக்கு பகிர்வது உள்ளிட்டவைகளை செய்ய முடியும்.
bookmarks ஆப்சன் மூலமாக நீங்கள் செய்த கணக்குகளை நேரம், தேதி குறிப்பிட்டு Save செய்து கொள்ளலாம். பிறகு எப்போது வேண்டுமானாலும் அதனை பார்க்கவோ அல்லது மீண்டும் அதில் மாற்றங்களை செய்யவோ முடியும்.
முடிவுகளை உங்களுக்கு தெரிவிக்கும் போது ஆங்கிலம் உள்ளிட்ட 65 மொழிகளில் வழங்கும் வசதி இருக்கிறது.
தன்னுடைய பயணம் குறித்து விஜயராமன் கூறும்போது..
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய பயணத்தை தொடங்கும்போது என்னிடம் இந்த துறை சார்ந்தவர்களின் தொடர்பு கிடையாது, எப்படி ஆப் தயார் செய்து விற்பது என்பது தெரியாது, UI/UX designing குறித்து பட்டம் எதுவும் வாங்கியதில்லை.
visual effects மட்டுமே தெரிந்திருந்த நான் programming language ஐ கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். பிறகு VFX இல் பணியாற்றினேன், பிறகு தான் app development இல் இறங்கினேன்.
இந்த விருது விழாவிற்கு என்னை அழைத்தபோது App Developer என்கிற ரீதியில் அழைக்கிறார்கள் என நினைத்துக்கொண்டே சென்றேன். ஆனால் என்னுடைய பெயரை இந்த விருதுக்கு அறிவித்தவுடன் மிகுந்த ஆச்சர்யமும் மகிழ்ச்சியும் அடைந்தேன்.
PAMARAN KARUTHU