Site icon பாமரன் கருத்து

அம்மா கவிதைகள் – இணையத்தில் வட்டமிடும் சிறந்த கவிதை வரிகள்

Parenting in tamil

1. தாய் என்னும் தீபம் இந்த உலகில்

சுடர் விட்டு எரிவதால் தான் பாசம்

எனும் ஒளி இந்த உலகில் இன்னமும் மின்னி வருகிறது.

 

2. கடல் அலைகளுக்கு என்றுமே விடுமுறை கிடையாது

அது போல தான் தாயின் அன்பிற்கும்

இந்த உலகில் எல்லை கிடையாது.

 

3. என் அம்மாவின் கருவறையே

நான் மீண்டும் மரணித்து ஜனிக்க விரும்பும் கருவறை.

 

4. எனக்கு பிடித்த அம்மாவின் பொய்களில் இதுவும் ஒன்று

“சீக்கிரம் சாப்பிட்டு விடு”

இல்லைஎன்றால் நிலா வந்து திருடி கொள்ளும்”.

 

5. வாழ்க்கையில் எவ்வளவு துயரங்கள் இருந்தால் என்ன

என் அம்மாவின் முகத்தை பார்த்ததும்

அவள் தரும் ஆறுதலால் மீண்டும்

இந்த உலகையே வெல்லும் அளவிற்கு என்னுள்

வலிமை பிறந்து விடுகிறது.

 

6. தாயின் கருவறையில் இருந்து பிறக்கும் போதே

கற்பிக்க பட்டு விடுகிறது “அம்மா” என்னும் மூன்று எழுத்து.

 

7. காசு பணம் இல்லாதவன் என்றுமே ஏழை இல்லை

ஆனால் அன்னையின் அன்பை இழந்தவன் பணம் இருந்தும் ஏழை தான்.

 

8. எப்போதும் உன் அன்பு எனக்கு மட்டுமே சொந்தமாக வேண்டும்,

உன் தாலாட்டில் நான் தூங்க வேண்டும்,

உன் அரவணைப்பில் மடி சாய வேண்டும்,

நான் இருக்கும் வரை

என்றுமே நீ வேண்டும் என் தாயே.

 

9. எனக்கு என்ன பிடிக்கும் என்பது எனக்கு தெரியுமோ இல்லையோ

என் அன்னை தெரிந்து வைத்து இருப்பாள்

அனைத்தையும் தன்னுடைய மனக்கணக்கில்.

 

10. உன்னை பத்து மாதம் முகம் கூட

தெரியாமல் நேசித்த உன் தாயை மட்டும் சோதித்து விடாதே.

 

11. கல்லை சிற்பம் செய்து

அதனை சிலை ஆக்கி மாலை அலங்காரம் செய்து

பூஜை செய்யும் காணாத இறைவனை

நம்பி வாழும் நாம் அனைவருமே

நமக்காகவே உயிர் வாழும்

உயிருள்ள கடவுளான “அம்மா” வை மறந்து தான் போகிறோம்.

 

12. தமிழின் உயிர் எழுத்துக்களில் முதலாகி

மெய் எழுத்துக்களில் இடையாகி

உயிர் மெய் எழுத்துக்களில் கடை ஆகி

முற்று பெற்று வரும்

பெயர் கொண்ட அற்புத பிறவி “அம்மா”.

 

13. இந்த உலகில் எதை அளந்தாளும்

அம்மாவின் பாசத்தை அளக்க முடியாது.

 

14. நீ நின்ற இடத்தில இருந்தே கடவுளை காணலாம்

அதற்கு நீண்ட வரிசையில் நிற்க தேவையில்லை

அம்மாவின் வடிவில்.

 

15. நான் பார்த்த முதல் அழகியும் அவளே!

எனது உலக அழகியும் அவளே!

என் “அம்மா”

 

16. தேடிப்பார்த்தால் உலகில்

அம்மாவை விட தேவதை யாரும் இல்லை.

17. எத்தனை காலங்கள்

 

எத்தனை ஜென்மங்கள் கடந்தாலும்

 

 

உன் அன்பு மட்டும் என்றும் குறையுமா “அம்மா”.

 

18. ஒவ்வொரு உறவுக்கும் ஒரு எதிர்பார்ப்பு ஒன்று இருக்கும்

ஆனால் உன் உறவுக்கு மட்டும் தான் எந்த எதிர்பார்ப்பும் இல்லை “அம்மா”.

 

19. நான் அழுத பொழுது என்னை சிரிக்க வைத்த முகம்.

என்றுமே என்னை வெறுக்காத குணம்!

தவறுகளை மன்னிக்கும் மனம்!

அளவு இல்லாத பாசம்!

மற்றவர்கள் காட்டிடாதே நேசம் உடையவள் தான் “அம்மா”.

 

20.மகன்களின் இதயக்கூட்டில்

உண்மையான ராணி நீ மட்டும் தான் “அம்மா”.

 

21. தோட்டத்திற்கு அழகு பூக்கள்!

என் வெற்றிக்கு அழகு என்றுமே என் “அம்மா”

 

22. எனக்கு உயிர் தந்த உன்னை

என் உயிர் உள்ளவரை மறவேனோ “அம்மா”.

 

23. பிறக்கும் முன்னே உன் வலி கொண்டு

உலகை கண்டேன்

இறந்த பின்னே உன் எதிர்நின்று

என் உலகை காண்கிறேன் “அம்மா”.

 

24. தோல் சாய்ந்து நீ என்னைத் தாலாட்டு பாடும்போது

சொர்க்கத்தில் இருப்பது போல ஆனந்தம் கொண்டேன் “அம்மா”.

 

25. கருவறையில் இருந்த உணர்வை

உன் மடியில் உணருகிறேன் “அம்மா”.

 

26. ஆயிரம் கவிதைகள் உனக்காக எழுதினேன்

ஆனால், நீயோ

ஒரு வார்த்தை கவிதைக்குள்

அனைத்தையும் அடக்கி கொண்டாயே “அம்மா”.

 

27. நீ மண்ணில் உருவாகி மறைந்தாலும்

கூட உன் ஆத்மா என்னை கவனித்துக்

கொண்டே தானே இருக்கும் “அம்மா”.

 

28. நான் வாழ்க்கையில் தோற்றுக் கொண்டே இருந்தாலும்

என்னை நீ ஜெயிக்க வைத்துக் கொண்டே இருப்பவள் தான் “அம்மா”.

 

29. இரவு பகல் பாராமல் ஒளிவிளக்காய் இருந்தாய் நீ

உன் நிழலிலும் என்னை மிதிக்காமல்

கண் விழித்துப் பார்த்துக் கொண்டாள் “அம்மா”

 

30. தோல்வி கனம் என்னை துரத்தும்போது

என் மனம் தேடுதே,

 

 

உன் மடியில் சாய்ந்து இளைப்பாறும் இடம் அதே “அம்மா”


31. ஒத்த உசுருக்குள்ள எத்தனையோ ஆசைகள் சுமந்த நீ

அத்தனையும் உனக்காக அல்ல

எனக்காக தானே என உணர்த்தினாய் “அம்மா”

 

32. நான் நேசித்த முதல் பெண்ணும்

என்னை நேசித்த முதல் பெண்ணும்

நீதானே “அம்மா”

 

33. என் முகம் பார்க்கும் முன்பே

என் குரல் கேட்கும் முன்பே

என் குணம் அறியும் முன்பே

எனை நேசித்த ஒரே ஜீவன்

“அம்மா”

 

34. உயிர் எழுத்தில் “அ” எடுத்து

மெய் எழுத்தில் “ம்” எடுத்து

உயிர்மெய் எழுத்தில் “மா” எடுத்து

அழகாய் தொடுத்த உயிரோவியம் தான்

“அம்மா”

 

35. பேசியும் புரியாத உறவுகளுக்கு

மத்தியில் பேசாமல் புரிந்துகொள்ளும் உறவு

 

“அம்மா”

கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு

மத்தியில் கேட்காமல் கொடுக்கும் தெய்வம்

“அம்மா”


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version