இந்த பதிவினை இடுவதால் அமெரிக்காவிற்கு ஆதரவோ சதாம் உசேனுக்கு ஆதரவோ கிடையாது. உலக அரசியலை அறிந்துகொள்ளும் ஒரு சிறு முயற்சியே.
டிசம்பர் 30 2006 சதாம் உசேன் அந்நாட்டு நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
“சர்வாதிகாரத்தை தடுத்து மக்களாட்சியை மலர அமெரிக்கா எடுத்த நன்நடவெடிக்கை”
இது அமெரிக்காவின் அதிகாரத்தை விரும்புபவர்களும் சதாம் உசேனின் கொலையால் பயன் அடைந்தவர்களும் பேசிக்கொள்ளும் அல்லது பரப்பிக்கொள்ளும் சொல்லாடல். ஆனால் உண்மையான காரணங்கள் இவைதானா ?
போருக்கான அவசியம் :
பொதுவான காரணமாக அமெரிக்கா கூறியது அச்சுறுத்தக்கூடிய நியூக்கிலியர் ஆயுதம் (Nuclear Weapon) ஈராக் சர்வாதிகாரியான சதாம் உசேனின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அதனால் உலகிற்கும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் பாதுகாப்பில்லை.
ஆனால் சதாம் உசேனின் கைதுக்கு பின்னர் அப்படிப்பட்ட நியூக்கிலியர் ஆயுதம் (Nuclear Weapon) எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை என்பதே உண்மை. அப்படியென்றால் அது காரணமாக இருக்க வாய்ப்பில்லை.
பிறகு ?
சதாம் உசேன் ஈராக்கின் சர்வாதிகாரி, ஈராக் நல்ல எண்ணெய் வளம் மிக்க நாடு. உலக வர்த்தக பரிமாற்றத்தில் மிகப்பெரிய பங்கினை கொண்டது ஈராக் எண்ணெய் வளம் . அது தான் பிரச்சனை.
2000 ஆம் ஆண்டில் சதாம் உசேன் “உலக எண்ணெய் விற்பனை வர்த்தகத்தில் பெரும்பங்கினை அடையவும்,எந்த நேரத்திலும் எதையும் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் பெற விரும்பினார். மேலும் எந்த நேரத்திலும் ஈராக்கின் எண்ணெய் விற்பனையை நிறுத்தி உலகில் பற்றாக்குறையின் மூலமாக விலையேற்றத்தை கொண்டு வர வாய்ப்புண்டு”
இந்த நிகழ்வுகள் அனைத்தும் அதனால் ஏற்பட போகும் விளைவுகள் குறித்தும் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “2001 report on “energy security” – commissioned by then US Vice-President Dick Cheney” அறிக்கையில் மிக தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. சதாம் உசேன் மிகப்பெரிய சர்வாதிகாரியாக இன்னும் நிலைபெற்றுவிட்டால் அது உலகிற்கும் குறிப்பாக அமெரிக்காவிற்கும் பெரிய தொந்தரவாக அமைந்துவிடும். மேலும் எண்ணெய்க்காக அமெரிக்கா மிகப்பெரிய தொகையினை செலவு செய்யவும் நேரிடும்.
ஈராக் தங்கு தடையில்லாத கச்சா எண்ணையை சந்தைக்கு அனுப்ப வேண்டுமெனில் கண்டிப்பாக வெளிநாட்டு கம்பெனிகளின் ஆதிக்கம் இருந்தால் அங்கு மட்டுமே அது சாத்தியம். அது நடைபெற அங்கு சர்வாதிகாரியாக விளங்க கூடிய அமெரிக்காவின் நம்பிக்கை மிக்கவராக இல்லாத சதாம் உசேனை கொன்றால் மட்டுமே சாத்தியம். அதுதான் அங்கு நடந்தது.
சதாம் உசேனை கொல்ல அமெரிக்கா சொன்ன காரணங்கள் பொய் எப்படி ?
>> பேரழிவு ஆயுதங்களை கொண்டிருக்கிறார் சதாம் உசேன் :
அமெரிக்க நகரங்களை ஒரு மணி நேரத்திற்குள் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட ஆயுதங்களை சதாம் உசேன் வைத்துள்ளார் என்பதே ஆகா சிறந்த காரணமாக அமெரிக்கா சொன்னது .[உலகமே அதிர்ந்த 911 உலக வர்த்தக நிறுவனத்தை விமானத்தை கொண்டு தாக்கிய ஒபாமா பின்லேடனுடன் எந்த தொடர்பும் இவருக்கு இருந்ததில்லை. ] இதற்க்கு சான்றாக கடைசி வரை சதாம் உசேன் அந்த ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதே சான்று.
ஒரு சர்வாதிகாரியின் உயிர் எதிரியால் பறிக்கப்படும் சூழ்நிலையில் தன்னிடம் மிக பெரிய ஆயுதம் இருக்குமானால் அதனை நிச்சயமாக பயன்படுத்தாமல் இருந்திருக்க மாட்டார். ஒருவேளை அப்படி இருந்திருந்தால் அமெரிக்கா நிச்சயமாக போரினை மேற்கொண்டிருக்காது.
வடகொரியா அணு ஆயுதங்களை வைத்திருப்பதால் தான் அமெரிக்கா இத்தனை அடக்கமாக வடகொரியாவை கையாண்டுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அமெரிக்கா சதாம் உசேனிடம் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பின்புதான் போரில் ஈடுபட்டது.
>> வாயை மூடிக்கொண்டிருந்த உலக நாடுகள்
ஈராக் போரிற்கு எதிராக உலகில் எந்த ஒரு நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காரணம் அமெரிக்கா என்கிற பெரியண்ணனை எதிர்க்கவும் எண்ணெய் வளம் நமக்கும் தானே தேவை என்பதாலும் அமைதியாக இருந்திருக்கலாம்,
80 களில் சதாம் உசேன் பல பொதுமக்களை கொன்றதற்காக அவருக்கு இந்த தண்டனை கொடுக்கப்பட்டு இருந்தாலும் அமெரிக்கா மேற்கொண்ட போரினால் பல சாதாரண மக்கள் இறந்தனர். அங்கு நிலையான ஆட்சி இல்லாமல் போனதால் ISIS இயக்கம் வளர்ந்து அதனால் பல நாடுகளில் ஏற்படும் வன்முறைகளும் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் யார் பொறுப்பு.
>> பெயரளவிலான சர்வாதிகாரி
தன்னிடம் ஆயுதம் ஒன்றும் இல்லாமல் இருந்தபோதும் அமெரிக்கா போன்ற மிக பெரிய நாட்டினை எதிர்க்கும் துணிவு ஒருவருக்கு இருந்தால் அந்த மடமை கொண்டவரை என்னவென்று சொல்லுவது. தன்னிடம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் கடைசி வரை தன்னை சர்வாதிகாரியாக மட்டுமே சதாம் உசேன் நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்.
>> எண்ணெய் அரசியல்
நடந்த இந்த போரானது அமெரிக்காவின் ஏன் உலக நாடுகளின் “எண்ணெய் அரசியல்” என்றே வருணிக்கலாம். அதுவே உண்மை.
சர்வாதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அது அந்நாட்டு மக்களின் எழுச்சியினால் நடந்து அவர்களாலேயே அங்கு மக்களாட்சி மலர்ந்தால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.
குறிப்பு : இக்கருத்துக்கள் அனைத்தும் இணையத்தில் இருக்கின்ற தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. உங்களுக்காக மொழிமாற்றம் செய்தும் சற்று சுருக்கியும் தரப்பட்டுள்ளன.
reference : https://www.theguardian.com/environment/earth-insight/2014/mar/20/iraq-war-oil-resources-energy-peak-scarcity-economy
பாமரன் கருத்து