அமேசான் மற்றும் பிளிப்கார்ட் கொடுக்கின்ற வரைமுறையற்ற ஆபர்களினால் வர்த்தகத்தில் இருக்கவேண்டிய இயல்பான போட்டி என்பது காணாமல் போய்விட்டது . இதனால் சிறு சிறு கடைகள் வைத்திருப்போர் வியாபாரத்தை விட்டு வெளியேர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
ஆன்லைன் வர்த்தகம் |Online Retailers
ஆன்லைன் வர்த்தகம் இரண்டு விதங்களில் நடக்கலாம் . ஒன்று பொருளினை தயாரிப்பவரே இணையதளத்தின் மூலமாக விற்பனை செய்வது . இரண்டாவது பொருளினை தயாரிப்பவர் மற்றும் வாங்குவோருக்கு இடையே இடைத்தரகர் ஒருவர் நுழைந்து அவரது இணையதளத்தின் மூலமாக வாங்கிடுவது . தற்போது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவை செயல்படுவது இரண்டாவது முறைப்படிதான் .
கட்டுக்கடங்காத ஆபர்கள் | Unconditional Offers
அமேசான் தற்போது Great Indian Festival எனவும் பிளிப்கார்ட் The BIG billion days எனவும் ஆபர்களை வழங்கி வருகின்றன . ஆபர் என்றால் சாதாரண ஆபர் இல்லை மிகப்பெரிய ஆபர் . குறிப்பிட்ட வங்கியின் ATM கார்டை பயன்படுத்தினால் இத்தனை சதவிகிதம் என ஆரம்பித்து , பொருளுக்கான விலையில் தள்ளுபடி , வட்டியில்லாத EMI , Exchange ஆபர் என பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது .
Negative Impact of Huge Offers
அதிகப்படியாக ஆபர்கள் கொடுப்பதனால் சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் பொருள் கிடைக்கின்றதே இதனை எப்படி தவறாக கூற முடியும் .
இயல்பாக நம் மனதில் எழக்கூடிய கேள்வி இவை . இதற்கான பதிலை தற்போது பார்க்கலாம் . நேரடியாக அணுகினால் இப்படித்தான் தோன்றும் ஆனால் கூர்ந்து கவனித்தால் இதானால் ஏற்படும் அபாயங்களை நம்மால் அறிய முடியும் .
வாங்கும் பழக்கம் அதிகரிக்கும் | Consuming Addiction
ஒருவருடைய பொருளாதாரம் அதிகரிக்க அவருடைய வருமானம் அதிகரித்து சேமிக்கும் பழக்கம் அதிகரிக்க வேண்டுமே அன்றி வாங்கும் பழக்கம் அதிகரிக்க கூடாது . தற்போது வழங்கப்படுகின்ற ஆபர்களினால் தேவைக்கு அதிகமாக நாம் பொருள்களை வாங்கி குவித்துக்கொண்டு இருக்கின்றோம் . இரண்டு வருடங்கள் வைத்திருக்கலாம் என்றாலும் இரண்டு மாதத்தில் புதிய மொபைல் வாங்கிடும் நிலைக்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம் .
மற்ற நிறுவனங்களை முடக்கும்
அமேசான் பிளிப்கார்ட் அதிகப்படியான ஆபர்களை வழங்கி வருகின்றது . இதனால் மக்கள் நேரடியாக கடைக்குச்சென்று வாங்குவதை தவிர்த்துவிட்டு அமேசான் அல்லது பிளிப்கார்ட்டில் பொருள்கள் வாங்கிக்கொள்கின்றனர் . இதனால் பல கடைக்காரர்களின் அன்றாட வியாபாரம் கூட நடைபெறாமல் அவர்கள் கடைகளை மூடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
இதற்கு மக்கள் என்ன செய்ய முடியும்? குறைந்த விலை இருக்கும் இடத்தில் தானே வாங்குவார்கள் ?
உண்மைதான் . ஆனால் குறிப்பிட்ட ஒரு பொருளை அதிகப்படியான தள்ளுபடிக்கு விற்று அதனால் மற்றொரு நிறுவனத்தின் விற்பனையை பாதித்தால் அது குற்றம் . அடிப்படை விலையை விட குறைவாக விற்க கூடாது . இதற்காக புகாரும் அளிக்கலாம் . ஆனால் இந்த விதி ஆன்லைன் வர்த்தகத்திற்கு இல்லை ஆகையால் தான் வாடிக்கையாளர்களை பிடித்தால் போதும் மற்ற நிறுவனங்களை மூடினால் போதும் என்ற ரீதியில் தங்களுடைய சொந்த பணத்தை ஆபர் என்ற பெயரில் வழங்கி அதிரடி காட்டுகின்றன அமேசான் பிளிப்கார்ட் போன்றவை .
இதனால் கடைகள் வைத்திருப்போர் நிச்சயமாக அமேசான் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்திருக்க வேண்டும் அல்லது கடைகளை மூடிவிட்டு செல்ல வேண்டும் என்ற சூழல் உருவாகியிருக்கின்றது .
லாபம் அந்நிய நாட்டுக்கே
அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இரண்டுமே வெளிநாட்டினரால் நிர்வகிக்கப்படுகிறது . ஒருவேளை இந்த இரண்டு நிறுவனங்களும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஜாம்பவான்களாக தொடர்ந்தால் சிறு வணிகர்களின் நிலை அதோகதி தான் . நாம் பொருள்களை வாங்குவதினால் கிடைக்கப்போகும் முழு லாபத்தையும் இவைகளே குவித்துக்கொள்ளும் . பலநபர்களுக்கு வேலை அளித்துக்கொண்டு இருக்கக்கூடிய நமது ஊரை சேர்ந்த முதலாளிகளை முடக்கிவிட்டு இவர்கள் பெரும் முதலாளியாக மாற போகிறார்கள் .
அரசே உடனடி நடவடிக்கை தேவை
ஒரு பொருளை MRP க்கு அதிகமாக விற்பது எப்படி வாடிக்கையாளர்களுக்கு செய்யும் குற்றமோ அதனைபோலவே ஒரு பொருளை அடிப்படை விலையை காட்டிலும் குறைவானதாக விற்பது சக வணிகர்களுக்கு செய்யும் குற்றம் .
தன் சொந்தபணத்தை முதலீடாக கொண்டு ஆபர் என கொடுத்து மற்ற போட்டியாளர்களை அழித்திடும் செயலை இனியும் கண்டுகொண்டிருக்க கூடாது .
ஒரு பொருள் ஆன்லைன் அல்லது இணையம் இரண்டிலும் அதிகபட்சமாக மற்றும் குறைந்தபட்சமாக எவ்வளவுக்கு விற்கப்படவேண்டும் என்பதனை அரசு சட்டமியற்றி வழிமுறை படுத்திட வேண்டும் .
இதனை வரைமுறைப்படுத்தாவிடில் இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவை மட்டுமே இருக்கும் .
அவர்கள் வைப்பதே விலையாக இருக்கும்