Site icon பாமரன் கருத்து

2018 இல் கூகுள்க்கு மாற்றாக பயன்படுத்தி பார்க்க வேண்டிய 5 தேடு பொறிகள் (Search Engines )

சென்னையில் பார்க்க வேண்டிய இடம் என்னென்ன ? நாளை வானம் மேகமூட்டத்துடன் இருக்குமா ? என மனதில் தோன்றும் கேள்விகளை நொடியில் சொடுக்கி விடைகளை அறிய பெரும்பாலனவர்கள் செல்வது கூகுள் தேடு பொறிக்குதான் . பல செர்ச் என்ஜின்கள் இருந்தாலும் நம் மனதில் எளிமையாக பதிந்து கிடக்கிறது கூகுள் .

அதற்கு காரணம் அதன் தயாரிப்புகள்.  கூகுள் பல தயாரிப்புகளை இலவசமாக பயன்படுத்திக்கொள்ள அனுமதி அளிக்கிறது . ஜிமெயில் , youtube , டிரைவ் என சொல்லிக்கொண்டே போகலாம் . ஆனால் பிரைவசி என வரும்போதுதான் சிக்கல் ஏற்படுகிறது .

நாம் பயன்படுத்தும் ஒவ்வொருமுறையும் நமது தகவல்களை கூகுள் சேகரித்து வைக்கிறது என்பதே உண்மை . நீங்கள் உங்களது ப்ரைவசியை விரும்புபவராக இருந்ததால் நீங்கள் பயன்படுத்தி பார்க்க வேண்டிய 5 தேடுபொறிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன .

DuckDuckGo : (https://duckduckgo.com)

தனிப்பட்ட விவரங்களை சேகரிக்காத தேடுபொறிகளின் வரிசையில் வளர்ந்து வரும் தேடுபொறியாக இது இருக்கின்றது . இது இலவசமாகவும் (Open Source ) தனிபட்ட நபர்களின் விவரங்களை சேகரிக்காமலும் செயல்படும் .

கூகுள் அதன் தேடுதல் விவரங்களை பக்கம் பக்கமாக கொடுக்கும் . ஆனால் இந்த தேடுபொறியில் தொடர்ச்சியாக தேடுதல் விவரங்களை கொடுக்கும் .

Bing (https://www.bing.com)

இணைய உலகில் கூகுள்க்கு மிகப்பெரும் போட்டியாக விளங்கிக்கொண்டிருக்கிற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தேடுபொறிதான் பிங் (Bing )

கவர கூடிய background இமேஜுகளை கொண்டிருக்கிறது . ஒவ்வொருநாளும் கூகுளுக்கு அருகில் நெருங்கிக்கொண்டிருக்கிறது பிங் .

Yippy :(https://yippy.com)

இப்பி தேடுபொறி Carnegie Mellon University இல் உள்ளவர்களால் உருவாக்கப்பட்டது . 2009 இல் உருவாக்கப்பட்ட இந்த தேடுபொறியானது மிக ஆழமாக விவரங்களை தேடி படிப்பவர்களுக்காக தயாரிக்காட்டது .

மற்ற தேடுபொறிகள் அதிக அளவு விவரங்களை கொடுப்பதில் கவனம் செலுத்தும்போது விவரங்களை துல்லியமாக தேடி கொடுக்கிறது இப்பி .

WolframAlpha : (http://m.wolframalpha.com)

தேடுபொறிகளில் தனித்துவம் வாய்ந்தது WolframAlpha தேடுபொறி . மற்ற தேடுபொறிகள் தேடுதல் விவரங்களை மட்டும் கொடுக்க இந்த தேடுபொறியானது தேடும் விவரங்களை ஒருங்கிணைத்து பதிலாக கொடுக்கின்றது .

நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதிலை வழங்குகிறது இந்த தேடுபொறி .

StartPage (https://www.startpage.com)

StartPage தேடுபொறியானது தனிப்பட்டவர்களின் விவரங்களை சேகரிக்காத மற்றுமொரு தேடுபொறி .
பொதுவாக கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகள் தன்னிடம் உள்ள தேடுபவர்களின் விவரங்களை கொண்டு தகவல்களை கொடுக்கும் .

உதாரணமாக நீங்கள் வெறுமனே ஒரு ஹோட்டலை தேடினால் கூகுள் நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்ற தகவல் தன்னிடம் இருக்கிறதா என பார்க்கும் . நீங்கள் மேப் பயன்படுத்தினால் கூட அந்த தகவல் கூகுளிடம் இருக்கும் . அதனை பயன்படுத்தி உங்களுக்கு அருகில் இருக்க கூடிய ஓட்டலை தரும் .

ஆனால் Startpage உங்களது விவரங்களை பார்க்காமல் தேடுதல் விவரங்களை கொடுக்கும் .

இந்த தேடுபொறிகளையும் பயன்படுத்தி பாருங்கள் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version