ரிசர்வ் வங்கி புதிய நூறு ரூபாய் நோட்டை வெளியிட போவதாக அறிவித்துள்ளது . ஏற்கனவே 10, 50,200,500,2000 என அனைத்து நோட்டுகளும் பல வண்ணங்களில் அச்சடிக்கப்பட்டு பொதுமக்களின் புழக்கத்திற்கு வெளியிடப்பட்டன . தற்போது அந்த வரிசையில் 100 ரூபாயும் இணைகிறது . நூறு ரூபாய் குறித்த சில தகவல்கள் உங்களுக்காக…
Colorful Indian Currency
Rs 10 – Chocolate Brown
Rs 50 – Fluroscent Blue
Rs 100 – Lavender
Rs 200 – Yellowish Orange
Rs 500 – Stone Grey
Rs 2000 – Magenta
புதிய நூறு ரூபாய் தாளிலும் பாரத தந்தை மகாத்மா காந்தி இடம்பெறுகிறார் . அந்த வகையில் மகாத்மா காந்தியின் வரிசையில் வருகின்ற புதிய நாணயமாக இந்த நோட்டு அமைகின்றது .
தற்போதய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் அவர்களின் கையெழுத்தோடு வெளியாகிறது புதிய நூறு ரூபாய் நோட்டு .
நோட்டின் பின்புறமாக குஜராத் மாநிலத்தில் இருக்கக்கூடிய Rani ki vav என்னும் நினைவுச்சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது . இந்த நினைவுச்சின்னம் 2014 ஆண்டு UNESCO வினால் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது .
புதிய நூறு ரூபாய் நோட்டு லாவெண்டர் கலரில் வடிவமைக்கபட்டுள்ளது
புதிய ரூபாய் நோட்டின் வடிவம் 66 mm X 142 mm
ஏற்கனவே புழக்கத்தில் இருக்கக்கூடிய 100 ரூபாய் நோட்டுகள் செல்லும்.
விரைவில் வெளியிடப்படும் புதிய ரூபாய் நோட்டானது படிப்படியாக அதிக அளவில் அச்சடிக்கபட்டு விநியோகிக்கப்படும் .
தேவனாகிரி எழுத்துக்களில் 100 என்பது பொறிக்கப்பட்டுள்ளது .
முன்பக்கத்தில் மகாத்மா காந்தி அவர்களின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது .
ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்தும் உறுதி மொழியும் முன்பக்கத்தில் இடம் பெற்றுள்ளது .
பின்பக்கத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் லோகோ பதிவிடப்பட்டுள்ளது .
மொழிகளின் பட்டியல் பதிவிடப்பட்டுள்ளது .
Pamaran Karuthu