Site icon பாமரன் கருத்து

அனைத்துக்கட்சி கூட்டம் – சில சுவாரஸ்யமான நிகழ்வுகள் : பாராட்டுக்குரிய சிறந்த முயற்சி

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் இறுதித்தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்டது . அது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தினை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியது நினைவிருக்கலாம் . தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டம் தேவையில்லை என கூறியது , பிறகு திமுக தேதியை அறிவித்ததும் அதிமுக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது .

சில சுவாரஸ்யமான தகவல்கள் :

தமிழகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் 11 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் நடக்கிறது . மிகபெரிய ஆளுமைகள் இருந்த போது நடக்காதது தற்போது நடந்திருப்பது மகிழ்ச்சிக்கு உரியது .

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு வந்தவர்களை முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள் வாசலிலே நின்று வரவேற்பு கொடுத்திருக்கும் மாண்பு பாராட்டுதலுக்கு உரியது . கொள்கைகளில் உரசல்கள் இருந்ததாலும் பொதுப்பிரச்னைகளில் ஒன்றாக சேர்ந்து நிற்க இது உதவும் .

அனைத்து கட்சிகளிடமும் அவர்களது கருத்துக்கள் கேட்கப்பட்டு இறுதி முடிவுகள் எடுத்திருப்பது சிறப்பு .

 

உணவு இடைவேளையின்போது பண்ணீர்செல்வம் செல்வம் , வைகோ , ஸ்டாலின் , வேல்முருகன் ஆகியோர் ஓர் மேசையில் அமர்ந்து கலந்துரையாடிக்கொண்டு உணவு அருந்தியது ஆச்சர்யத்தை அளித்தது .

தீர்மானங்கள் :

உச்சநீதிமன்றம் இதுவே இறுதி தீர்ப்பு எனவும் , மேல்முறையீடு செய்ய முடியாது எனவும் கூறிவிட்ட பிறகு அதில் பெரிய அளவில் மாற்றங்களை வேண்டி தீர்மானம் போடுவதற்கு வாய்ப்பில்லை . இருந்தாலும் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக கட்சிகளின் ஒற்றுமையை உணர்ந்து மத்திய அரசு தீர்ப்பினை கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுத்தாமல் போவதற்கு தடையாக இருக்கும் .

பின்வரும் மூன்று தீர்மானங்களை தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தில் நிறைவேற்றியுள்ளது .

 

இனிமேலும் இந்த ஒற்றுமை தமிழக மக்களின் நலன் சார்ந்த பொது பிரச்சனைகளில் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் .

முதல்வர் , துணைமுதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version