கி.ரா என சுருக்கமாக அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் கரிசல் மக்களின் வாழ்வியலை இலக்கியத்தின் அத்தனை பாகங்களையும் பயன்படுத்தி உலகிற்கு கொண்டு சேர்த்தவர். ஆகவே தான் கி.ரா கரிசல் இலக்கியத்தின் தந்தை என போற்றப்படுகிறார்.
கி.ரா பிறப்பு :
கி.ராஜநாராயணன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தவர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமியும் இங்கே பிறந்தவர் தான். இரண்டு சிறந்த எழுத்தாளர்கள் ஒரே ஊரில் பிறந்து வளர்ந்ததை இலக்கிய உலகில் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள். பள்ளிப்படிப்பில் பெரிய ஆர்வம் இல்லாத கி.ரா ஏழாம் வகுப்பு வரைக்கும் தான் படித்தார். அதேபோல, 40 வயதிற்கும் மேலாகத்தான் இவர் எழுத்துவங்கினார். அவரது முதல் சிறுகதையான மாயமான் 1958 ஆம் ஆண்டு சரஸ்வதி இதழில் வெளியானது.
கரிசல் இலக்கியத்தின் தந்தை
கரிசல் மக்களின் கதைகளை யார் விரும்பி படிக்கப்போகிறார்கள் என பிறர் நினைத்தார்களோ என்னவோ தெரியாது. ஆனால் கரிசல் மக்களுக்கும் வாழ்வியல் உள்ளது, ஏற்ற இறக்கங்கள் உள்ளது, அவர்களுக்கும் ஏக்கம் உள்ளது என்பதை தனது கதைகளின் வாயிலாக மண் மனம் மாறாமல் புனைவுகளை நாடாமல் உள்ளது உள்ளபடி எழுதினார். கரிசல் மக்களின் கதைகளை இலக்கியத்தின் அனைத்து முறைகளிலும் உலகிற்கு அறிமுகப்படுத்தினார். கடிதமாக, நாவலாக, சிறுகதையாக, இலக்கியமாக எழுதினார். “கரிசல் வட்டார வழக்கு அகராதி” என்ற ஒன்றினை எழுதி கரிசல் எழுத்தாளர்களுக்கு வலு சேர்த்தார் கி.ரா.
கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்ற தவிர்க்க முடியாத பெரும் எழுத்தாளர் கி.ரா.
தற்போது தமிழ் இலக்கிய உலகில் கரிசல் எழுத்தாளர்கள் என்ற அடையலாம் உண்டு. இதற்கு அடித்தளம் இட்டவர் கி.ரா என்றால் மிகையாகாது. இவர் ஏற்படுத்திய தாக்கத்தினால் பூமணி, பா.ஜெயபிரகாசம் கோணங்கி, தமிழ்ச்செல்வன், தேவதச்சன், சோ. தர்மன். முத்தானந்தம், உதயசங்கர், காசிராஜன், கௌரி சங்கர், சாரதி, ஜோதி விநாயகம், மேலாண்மை பொன்னுசாமி, அப்பண்ணசாமி பாரததேவி என்பன போன்ற கரிசல் எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய உலகிற்கு வருகை தந்தார்கள்.
கி.ரா மறைவு
99-வது வயதில் உடல் முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக வீட்டில் ஓய்வெடுத்த கி.ரா, மே 17-ம் தேதி இரவு 11.45 மணியளவில் புதுச்சேரி லாஸ்பேட்டையில் அரசுக் குடியிருப்பில் உயிரிழந்தார். 100 வயதை எட்ட சில மாதங்களே இருந்த சூழ்நிலையில் இவ்வுலகில் இருந்து விடைபெற்றுக்கொண்டு கி.ரா சென்று விட்டார். இவரது பிரிவை தமிழ் இலக்கிய உலகின் பெரும் இழப்பாக கருதுகிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தான் ‘அண்டரெண்டப் பட்சி’ என்ற நூலை கையெழுத்துப்பிரதியாக வெளியிட்டார். அச்சு கோர்க்காமல் தனது கையெழுத்து வடிவிலேயே புத்தகம் வர வேண்டும், அதனை வாசகர்கள் படிக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்திற்கு இணங்க அப்படியே வெளியிடப்பட்டது.
எங்கிருந்தாலும் உங்கள் பேனா கரிசல் மக்கள் வாழ்வியலை எழுதிக்கொண்டே இருக்கும் கி.ரா.
தொத்தாவை சோதித்த அண்ணா
அகராதிகள் : கரிசல் வட்டார வழக்கு அகராதி
சிறுகதைகள் :
கன்னிமை
மின்னல்
கோமதி
நிலை நிறுத்தல்
கதவு(1965)
பேதை
ஜீவன் நெருப்பு (புதினம்)
விளைவு
பாரதமாதா
கண்ணீர்
வேட்டி
கரிசல்கதைகள் :
கி.ரா-பக்கங்கள்
கிராமிய விளையாட்டுகள்
கிராமியக்கதைகள்
குழந்தைப்பருவக்கதைகள்
கொத்தைபருத்தி
புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
பெண்கதைகள்
பெண்மணம்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
கதை சொல்லி(2017)
குறுநாவல்
கிடை
பிஞ்சுகள்
நாவல்
கோபல்ல கிராமம்
கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது)
அந்தமான் நாயக்கர்
கட்டுரை :
ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
புதுமைப்பித்தன்
மாமலை ஜீவா
இசை மகா சமுத்திரம்
அழிந்து போன நந்தவனங்கள்
கரிசல் காட்டுக் கடுதாசி
தொகுதி
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்
ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்)
Download/Buy : பட்டாம்பூச்சி
Download/Buy : நாற்காலி
Download/Buy : கரிசல் பயணம்
Download/Buy : கி.ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்