Site icon பாமரன் கருத்து

All about Karnadaka election | எடியூரப்பா முதல்வரானது எப்படி ? நீடிப்பாரா ?

தென்னிந்திய மாநிலங்கள் எப்போதுமே பிஜேபி க்கு சவாலான மாநிலங்களாகவே இருந்து வந்திருக்கின்றன . வடக்கிலே ஆகப்பெரும் பெரும் வெற்றிகளை பெற்றுவந்த பாஜகவிற்கு கர்நாடக தேர்தலிலும் வென்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது . அதற்கு முக்கிய காரணம் அங்கு மட்டுமே தற்போது ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு கட்சி வலுவாக இருக்கின்றது என்பதுதான் .

மேலும் கர்நாடகாவில் ஆட்சி அமைந்துவிட்டால் பிற அண்டை தென்னிந்திய மாநிலங்களில் வலுவாக காலூன்ற அது பயன்படும் என்கிற அரசியல் கணக்கும் காரணம் .

கர்நாடகா தேர்தல் (Karnadaka Election) :

காங்கிரஸ் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது லிங்காயத் மதத்தை தனி மதமென மாற்றியதிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாதது வரை அனைத்துமே அரசியலாக்கப்பட்டு தேர்தலுக்காக பயன்படுத்தப்பட்டது .

ஒருபக்கம் பாஜக வேட்பாளர் எடியூரப்பா மறுபக்கம் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையா , இது தவிர தேவகௌடாவின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தேர்தலில் களம் கண்டன .

ஏற்கனவே இருக்கின்ற ஆட்சியை கைப்பற்ற சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ்காரர்கள் கடுமையாக உழைத்தனர் . அதன் தலைவர் ராகுல்காந்தியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .

மறுபக்கம் பாஜகவோ பிரதமர் , உத்தியப்பிரதேச முதல்வர் யோகி , மத்திய அமைச்சர்கள் என பெரும் பட்டாளத்தையே களத்தில் இறக்கியிருந்தது . அவ்வபோது வந்த தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளும் மாறி மாறி வந்தது . இதனால் உண்மையில் யார் வெற்றி பெறுவார் என்பது குழப்பமாகவே இருந்தது .

வெளியான கர்நாடகா தேர்தல் முடிவுகள் Karnadaka Election Result:

வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது பாஜக தேவையான இடங்களைவிட முன்னிலை வகித்தவுடன் அந்த கட்சி கொண்டாட்டதில் இறங்கியது .

சிறிது நேரத்தில் காட்சிகள் மாறி குறிபிடத்தக்க தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது . இதனால் மீண்டும் குழப்பம் தொற்றிக்கொண்டது .

இறுதியாக வெளியான முடிவுகளின்படி

 

 

 

மாநிலத்தில் ஆட்சி அமைக்க குறைந்தபடச்சம் 112 இடங்கள் தேவை ஆனால் பாஜகவிற்கு அவ்வளவு இடம் கிடைக்கவில்லை

இதற்கிடையில் காங்கிரஸ் ஐக்கிய ஜனதா தளத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை கொடுக்க முன்வந்தது . இதனால் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது .

கர்நாடகா ஆளுநர் எடியூரப்பாவை அழைத்தார் Governor calls ediyurappa:

காங்கிரஸ் கட்சியின் ஆதரவால் ஐக்கிய ஜனதா தளத்தின் எண்ணிக்கை 34 + 78 112 ஆக உயர்ந்தது . மேலும் சுயேட்சைகளின் ஆதரவும் இருப்பதால் 115 உறுப்பினர்களை கொண்ட தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் முறையிட்டனர் .

பாஜகவோ நாங்கள் தான் தனி பெரும்பான்மை கொண்ட கட்சி ஆகையால் தங்களையே ஆட்சி அமைக்க அழைக்கவேண்டும் என முறையிட்டனர் .

ஆளுநர் முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் உள்ளது . ஆகையால் அவர் பெரும்பான்மை இல்லாத ஆனால் தனிப்பெரும்பான்மை கொண்ட பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார் .

நள்ளிரவில் உச்சநீதிமன்ற விசாரனை (Supreme court investigated midnight):

தீவிரவாதி அப்ஸல் குரு சம்பந்தபட்ட விசாரனை நள்ளிரவில் நடந்தது . பிறகு தற்போது எடியூரப்பா பதவியேற்பை எதிர்த்து தொடரப்பட வழக்கில் நள்ளிரவில் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை ஏற்று விசாரனை நடத்தப்பட்டது .

தாக்குபிடிப்பாரா எடியூரப்பா ?

நீதிமன்ற விசாரனையின்போது பதவியேற்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது நீதிமன்றம் . மேலும் பதவியேற்பு தங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டது எனவும் தெரிவித்தனர் .

அதோடு ஆளுநரிடம் சமர்ப்பித்த சட்டமன்ற உறுப்பினர்களின் கடிதம் , ஆதரவு உறுப்பினர்களின் பெயர்களையும் சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் 104 பெயர்கள் மட்டுமே இருப்பதாலும் பாஜக வின் பக்கம் ஆதாரபூர்வமாக எவரும் வாராததாலும் எடியூரப்பாவின் பதவியை நீடிக்க நீதிமன்றம் விடுமா என தெரியவில்லை .

பாமரன் கருத்து

Exit mobile version