ஒவ்வொருவரும் வெற்றி பெற விரும்புகிறோம். அதற்காக நம்மை தயார்படுத்திக்கொள்ள பல சுயமுன்னேற்ற புத்தகங்களை வாசிக்கிறோம். இந்தப் புத்தகமும் அந்த வரிசையில் உள்ள ஒரு சுயமுன்னேற்ற புத்தகம் தான் என்றாலும் கூட மற்ற புத்தகங்களோடு ஒப்பிடுகையில் அடுத்த வினாடி புத்தகம் சற்று தனித்து நிற்கிறது. அதற்கு காரணம், அதனுள் அடங்கி இருக்கும் எண்ணற்ற கருத்துக்கள்.
அடுத்த வினாடி PDF Download
இந்தப்புத்தகம் யாருக்கானது என்ற கேள்வி எழலாம். புந்துகொள்வது முதல் கட்டம். புரிந்ததை பின்பற்றுவது இரண்டாவது கட்டம். இந்த இரண்டையும் செய்பவர்களுக்காகத்தான் இந்தப்புத்தகம். அதாவது, வாழ வேண்டும், வாழ்ந்து காட்ட வேண்டும் என்கிற பேராசை கொண்டவர்களுக்கானது இந்தப்புத்தகம் என்கிறார் இந்த நூலின் ஆசிரியர் நாகூர் ரூமி. பல வெற்றியடைந்த மனிதர்களின் அனுபவத்தில் இருந்து உருவான இந்தப்புத்தகம்.
இந்தப்புத்தகம் எந்தவகையில் மற்ற புத்தகங்களில் இருந்து வேறுபட்டது என்றால், மற்ற புத்தகங்கள் தினமும் அரைமணி நேரம் தியானம் செய்திடுங்கள் என்றால் இந்தப்புத்தகம், தியானம் என்றால் என்ன, தியானம் எப்படி செய்வது, எந்த நேரத்தில் செய்வது, எவ்வளவு நேரம் செய்வது என்ற செய்முறை விளக்கங்களை எல்லாம் உங்களுக்கு கற்றுக்கொடுக்கும்.