கடுமையாக வெயிலில் கட்டிட வேலை செய்துகொண்டிருக்கும்போது கொஞ்சநேரம் மேகத்தால் நிழல் வந்தாலோ அல்லது சில்லென காற்று வீசினாலோ எவ்வளவு அருமையாக இருக்கும் . அதுவே வேலை செய்யும்பொழுது எப்போதும் குழு குழு காற்று கிடைத்தால் எப்படி இருக்கும் .
ஆம் இதற்காகவே புதுவித ஹெல்மெட் ஒன்றினை ஹைதராபாத்தை சேர்ந்த மூன்று பொறியியல் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர் . அதனை தலையில் அணிந்துகொண்டால் குழு குழு வென காற்று உங்கள் உஷ்ணத்தை குறைக்கும் .
இந்த ஹெல்மெட் குறித்த சில சிறப்பு தகவல்கள் :
இந்த ஹெல்மெட் கடந்த 2016 செப்டம்பர்
மாதமே உருவாக்கப்பட்டுவிட்டது . இதில் 85 சதவிகித பொருள்கள் இந்திய சந்தையில் கிடைப்பவை .
இந்த ஹெல்மெட் பயன்படுத்துவதால் முடி கொட்டாது .
மற்ற ஹெல்மெட்டை விட 250 கிராம் மட்டுமே அதிக எடை கொண்டது .
பேட்டரியால் இயங்கக்கூடியது
அடிப்படை விலை 5 ஆயிரம் மட்டுமே (இரண்டு மணி நேரம் இயங்கும் ) 8 மணிநேர ஹெல்மெட் 5500 .
இந்த ஹெல்மெட் கட்டிடவேலை , அதிக வெப்பமுள்ள இடங்களில் வேலை செய்வோர் , வெளியில் வேலை செய்வோருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
நன்றி
பாமரன் கருத்து