கேரளாவில் இரண்டு குடும்பங்கள் தங்களது பிள்ளைகளின் இறப்பிற்கு இந்த கேம் தான் காரணம் என முறையிட்டுள்ளனர் Refer : http://www.ndtv.com/india-news/kerala-police-investigates-16-year-olds-alleged-blue-whale-suicide-1738187 . இதனை அடுத்து கேரளா முதல்வர் பினராயி விஜயன் உடனடியாக இதுபோன்ற கேம் களை அகற்றிட வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ரவிசங்கர் பிரசாத் அவர்களும் இந்த கேமை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
ப்ளூ வேள் செலஞ்ச் (Blue Whale Challange) பற்றி :
மற்ற விளையாட்டுகளில் இருப்பதை போன்றே இதிலும் லெவல் இருக்கும். இதில் 50 டாஸ்க் தரப்படும். ஒவ்வொரு டாஸ்க்க்கும் நீங்கள் நிகழ்காலத்தில் செய்ய கூடியவையாக இருக்கும். நீங்கள் செய்துவிட்டிர்களா என யாரும் உங்களை கேட்க மாட்டார்கள். நீங்களாகவே உங்கள் டாஸ்கை முடித்தவுடன் அடுத்த டாஸ்கை பெறலாம்.
உதாரணமாக இன்று கதவை மூடாமல் நீங்கள் உறங்க வேண்டும் அல்லது போர்வை போர்த்தாமல் உறங்க வேண்டும், ஒருநாள் சாப்பிடாமல் இருப்பது என்பது போன்ற எளிமையான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். விளையாடுவபர்களும் இதனை விளையாட்டாக செய்து முடிப்பார்கள். இரவில் வீடு மாடி சுவரில் நடப்பது, ரயில் கிட்ட வரும்போது தண்டவாளத்தை கடப்பது போன்ற கடினமான டாஸ்க்குகள் இறுதி கட்டத்தில் வரும். இந்த மாதிரியான கடின டாஸ்க்குகளை செய்யும் அளவிற்கு நம் மனதினை இந்த கேமின் முதல்கட்ட எளிமையான டாஸ்க்குகள் மாற்றிவிடும். கிட்டத்தட்ட அந்த கேமில் கொடுக்கப்படும் என்ன கொடுத்தாலும் செய்கின்ற அடிமை நிலைக்கு நம்மை மாற்றி விடும்.
இதில் பிரச்சனை என்னவென்றால் இதன் கடைசி டாஸ்க், ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும் அல்லது கொலை செய்யவேண்டும். பெரும்பாலும் இதில் தற்கொலை செய்யவேண்டும் என்பதே கடைசி டாஸ்க் ஆக இருக்கும். இதனை செய்யும் அளவிற்கு மனதை அடிமையாக்கி விடுவதே இந்த கேமின் கொடூரம்.
இந்த கேமின் நோக்கம் என்ன ?
Philipp Budeikin என்கிற மனநலம் தொடர்பாக படிக்கும் மாணவரே இந்த கேம் உருவாக்கியதற்காக பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுளார். அதன்பிறகு ரஸ்யாவில் 16 இளைய பெண்கள் தற்கொலை செய்துகொண்டது இந்த கேமினால் தான் என்பதை கண்டுபிடித்ததன் விளைவாக இவர் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இந்த கேமின் நோக்கத்தினை கேட்டபொழுது ” தன்னால் ஒரு பயனும் இல்லை என்று கருத்துபவர்களை தற்கொலை செய்ய தூண்டி அவர்களை இந்த சமூகத்தில் இருந்து நீக்குவதே இதன் நோக்கம்” என்று கூறியுள்ளார்.
பெற்றோர் செய்ய வேண்டியது :
இந்த கொடூர கேம்களில் இருந்து பிள்ளைகளை காப்பற்ற பிள்ளைகள் இதுபோன்ற விளையாட்டுகளை விளையாடுகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். அப்படி அவர்கள் விளையாடுவதை பார்த்தால் அவர்களை சிறந்த மனநல மருத்துவரிடம் கூட்டிச்சென்று ஆலோசனை வழங்கிட வேண்டும்.
நண்பர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் விளையாடுகிறார்கள் என்பது தெரிந்தால் இதுபோன்ற ஆளைக்கொல்லும் விளையாட்டுகளை விளையாடவேண்டாம் என அறிவுரை கூறி அவர்களை காப்பாற்றிட வேண்டும்.
அரசும் இதுபோன்ற கேம் இந்தியாவில் விளையாடப்படுவதை முற்றிலும் தடுக்க வேண்டும்.
இதை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பது நம் ஒவ்வொருவரின் கடமை.
பகிருங்கள் உங்களுக்கு தெரிந்தவர்களுடன்…
பாமரன் கருத்து