கடற்கோடியில் பிறந்த
கனவு நாயகன்…
காலம் பெற்றெடுத்த
காவிய தலைவன்…
காலம் கடைக்கோடியில்
கடலில் தள்ளினாலும்
கண் தூங்காமல்
கனவுகள் கண்டு
தலைநகரில் கம்பீரமாய் காட்சியளித்த
முதல் மகன்…
பிள்ளைகள் ஆயிரம் பெற்றாலும்
பேரு அடையாத பாரத தாய்
அன்று தான் கம்பீரமாக
காட்சி தந்தாள்
நீ அனுப்பிய ரோஹினியால்…
தலை சிறந்த விஞ்ஞானி
அனைத்தும் அறிந்த அறிவாளி
சிறந்த பொருளாளர்
அத்தனையும் கொண்ட உன்னை
அலங்கரிக்க “பத்ம பூஷன்”
குடிக்க கஞ்சி இல்லாதவனும்
குடியரசு தலைவர் ஆகலாம்
கனவுகள் கண்டால்
ஆமாம்
கலாமை போல
தூங்கவிடாத கனவுகள் கண்டால் என்று
இளையோருக்கு உணர்த்திட்ட
இரும்பு தலைவன்…
ஒருகோடிக்கும் மேற்பட்ட
மாணவ செல்வங்களை சந்தித்து
உரையாடிய ஒப்பற்ற தலைவன்…
ஆயிரம் அடைமொழிகள் இருந்தும்
ஆசிரியர் என்ற அழைப்பினையே
ஆயுள் முழுதும் விரும்பிய
அற்புத மனிதன் …
காலம் ஆர்ப்பரித்தது
கலாமை பிரித்ததற்காக…
காலம் அறியாது
கலாமின் கனவான
“வல்லரசு இந்தியா”
கனவை சுமக்கும்
ஒவ்வொரு இளைஞனின் இதயத்திலும்
ஒவ்வொரு இளைஞனின் செயலிலும்
கலாம் வாழ்கிறார் என்று….
எங்கள் ஆசான் இன்றும் எங்களோடு தான் இருக்கின்றார்…
எங்களை தூங்கவிடாத கனவுகளில்…
பாமரன் கருத்து