சொந்தமாக வீடு வாங்குவது அல்லது சொந்தமாக வீடு கட்டுவது என்பது பலரது வாழ்வின் லட்சியங்களில் ஒன்று. நமக்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்கள் சிறிது சிறிதாக வீடுகட்ட பணம் சேர்த்து அதன் பின்னர் கடனே வாங்காமல் வீடு கட்டுவார்கள். ஆனால் நம் காலத்தில், இப்போதுள்ள சூழலும் வங்கி நடைமுறைகளும் வீட்டை கட்டிவிட்டு பிறகு மாதம் மாதம் பணத்தை தவணை முறையில் செலுத்தும் “Home Loan” ஐ இலகுவாக்கி இருக்கின்றன.இதனால் மாதம் ரூ30,000 சம்பாதிக்கும் ஒருவராலும் இன்று ரூ20,00000 “Home Loan” வாங்கி சர்வ சாதாரணமாக தான் ஆசைப்பட்ட வீட்டை சொந்தமாக வாங்கிக்கொள்ள முடியும் அல்லது கட்டிக்கொள்ள முடியும்.
மொத்தமாக பணம் இல்லாத நபர்கள் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி வீடுகட்டிக்கொள்வது தவறான விசயம் இல்லை. ஆனால், வீட்டுக்கடன் வாங்குகிற பலர் அதிலே இருக்கும் சில உள்ளார்ந்த விசயங்களை அறிந்துகொள்ளாமல் முதலில் ஹவுசிங் லோன் வாங்கிவிட்டு பின்னர் அடடா இந்த வசதி இருப்பது தெரியாமல் போச்சே, இதனை கவனிக்காமல் விட்டுவிட்டேனே என புலம்புவதை பார்க்க முடிகிறது. நீங்களும் அப்படி புலம்பக்கூடாது என்றால் வீட்டுக்கடன் வாங்குவதற்கு முன்னால் இந்த 6 விசயங்களை தெரிந்துகொள்வது நல்லது.
1. வட்டி முறையில் நீங்கள் கவனிக்க வேண்டியது [Interest payments]
சாதாரணமாக, எந்தவொரு கடன் வாங்குவதற்கு முன்னாலும் ஒரு வங்கியை மட்டும் அணுகாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளை அணுகி அங்கே வட்டி விகிதம் எவ்வளவு, Home Loan க்கு அங்கே ஏதேனும் சிறப்பு சலுகை வழங்கப்படுமா என்பவை போன்று விசாரித்து குறைந்த வட்டிவிகிதம் தரக்கூடிய வங்கியில் லோன் எடுப்பது சிறந்தது.
அடுத்தது, வட்டி எவ்வளவு என்பதை தீர்மானிப்பதில் பின்வரும் இரண்டு முறைகளை வங்கிகள் கடைபிடிக்கின்றன,
* Floating
* Fixed
Floating – இந்த முறையில், அவ்வப்போது RBI நிர்ணயிக்கும் வட்டிவிகித மாறுதல்களுக்கு ஏற்ப நீங்கள் வாங்கிய கடனுக்கான வட்டிவிகிதமும் மாற்றம் அடையும். பெரும்பாலும் Housing Loan க்கான வட்டிவிகிதத்தை RBI அதிகரிக்காது, குறைக்கவே செய்யும்.
Fixed – இந்த முறையில், நீங்கள் வீட்டுக்கடன் வாங்கியபோது என்ன வட்டிவிகிதமோ அதுதான் இறுதிவரைக்கும் இருக்கும்.
நீங்கள் வீட்டுக்கடன் வாங்கும் சூழ்நிலையில், நமது RBI வீட்டுக்கடனுக்கான வட்டியை குறைத்துவருகிறதா என்பதை கவனியுங்கள். அதனைப்பொறுத்து இரண்டில் ஒருமுறையை நீங்கள் தேர்வு செய்துகொள்ளுங்கள். பலரும் பரிந்துரை செய்வது Floating முறையைத்தான். பல வருடங்கள் கட்டப்போகும் வீட்டுக்கடனுக்கு RBI நிச்சயமாக 1%- 2% வரைக்கும் வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பு உண்டு என்கிறார்கள் நிபுணர்கள்.
2. எத்தனை தவணை [EMI Instalments]
வீட்டுக்கடன் என்றாலே பொதுவாக 20 ஆண்டுகளுக்கு மேலாகத்தான் EMI Instalments இருக்கும். நீங்கள் அதிக தொகையை மாதத் தவணையாக செலுத்த ஒப்புக்கொண்டால் உங்களுக்கான வட்டிவிகிதம் என்பது குறைவாக இருக்கும். உங்கள் திறனுக்கு ஏற்றவாறு மாதத்தவனையை நிர்ணயம் செய்துகொள்ளுங்கள். அதேபோல, home loan EMI calculator ஐ பயன்படுத்தி எவ்வளவு கட்டினால் எவ்வளவு வட்டி கட்ட வேண்டும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதிக தொகையை மாத தவணையாக கட்ட ஒப்புக்கொண்டுவிட்டு பிறகு கட்ட முடியாமல் தவிக்காதீர்கள். ஒருவர் தன்னுடைய வருவாயில் 30% பணத்தை மாதத் தவணையாக கட்டலாம் என்பது நிபுணர்களின் ஆலோசனை.
உங்கள் முதலீடு எவ்வளவு?
வண்டி வாங்கும் போதோ அல்லது வீட்டுக்கடன் வாங்கும்போதோ மொத்தமாக அனைத்தையும் கடனில் வாங்கிவிட முடிவு செய்யாதீர்கள். அது உங்களை பெரிய பண நெருக்கடியில் தள்ளிவிடும் என்பதோடு மட்டுமல்லாமல் நீங்கள் தேவையில்லாமல் அதிக அளவிலான பணத்தை வட்டியாக செலுத்தவும் நேரிடும். தற்போதைய சூழலில் வங்கிகள் 75% முதல் 90% வரைக்கும் லோன் தர ஒப்புக்கொள்கின்றன. எங்களுடைய ஆலோசனை என்னவெனில், குறைந்தபட்சம் 50% ஆவது உங்களது முதலீடாக இருக்க வேண்டும்.
4. வங்கியின் பிற கட்டணங்கள்
நீங்கள் ஒரு கடனை வங்கியில் வாங்கப்போகிறீர்கள் என்றால் நீங்கள் வெறுமனே வாங்கிய கடன், வட்டிப்பணம் இதனை மட்டும் செலுத்தினால் போதாது. இன்னும் சில கட்டணங்களையும் நீங்கள் கட்ட வேண்டும்.
* processing fees
* late payment penalties
* foreclosure charges
processing fees – இது ஒவ்வொரு வங்கியிலும் உள்ள கட்டணம். உங்களது லோன் அப்ளிகேஷனை முடித்து உங்களது கடன் கிடைப்பது வரை செயல்படுவதற்கான கட்டணம். இது எத்தனை சதவிகிதம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
late payment penalties – நீங்கள் மாத தவணையை செலுத்த தவறினால் அதற்கு எவ்வளவு கட்டணம் கூடுதலாக கட்ட வேண்டும் என்பது தான்.
foreclosure charges – வாங்கிய கடனை முன்கூட்டியே கட்ட நினைத்தால் அதற்கு எவ்வளவு பணம் கூடுதலாக செலுத்தி கடனை முடிக்க வேண்டும் என்பது தான் இது.
இவை அனைத்தும் வங்கிக்கு வங்கி மாறுபடும். ஆகவே எங்கே உங்களுக்கு சாதகமாக இவை இருக்கிறதோ அங்கே கடன் வாங்கிக்கொள்ளுங்கள்.
5. வங்கியின் விதிகளை படிப்பது நல்லது
பெரும்பான்மையானவர்கள் செய்யக்கூடிய மாபெரும் தவறு இது. வீட்டுக்கடன் என்பது மாபெரும் தொகை. அடுத்த 20 முதல் 30 ஆண்டுகள் என்பது தான் நீங்கள் சந்தோசமாக வாழக்கூடிய ஆண்டுகள். ஆகவே, அந்த அக்கறையோடு வங்கியின் விதிகளை படியுங்கள். அதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அதனை வங்கியில் கேட்டு புரிந்துகொள்ளுங்கள். பிறகு அரசு ஏதோ ஒரு சலுகையோ அல்லது விட்டிவிகித குறைப்போ செய்திடும் போது அது தங்களுக்கு பயன்படவில்லை எனும்போது வங்கிகள் நீங்கள் கையெழுத்திட விதிகளை காட்டும்போது கவலை அடைவதில் அர்த்தம் இல்லை. ஆகவே, விதிகளை படித்து புரிந்துகொள்ளுங்கள்.
இந்தப்பதிவு, வீட்டுக்கடன் வாங்க நினைப்பவர்களுக்கு உதவுதற்காக எழுதப்பட்ட கட்டுரை. இது உங்களுக்கு பயன் தந்திருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள். உங்களது கூடுதலான கருத்துகளையும் பதிவிடுங்கள். உங்களது நண்பர்களுக்கும் இந்தப்பதிவை பகிர்ந்துகொள்ளுங்கள்.
கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாக பயன்படுத்த 10 யோசனைகள்
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்