Site icon பாமரன் கருத்து

குழந்தைகளை சிறப்பாக வளர்க்க 5 விசயங்கள் | 5 Good Parenting Tips

அமெரிக்காவில் வாழுகின்ற பெற்றோருக்கும் இந்தியாவில் வாழுகின்ற பெற்றோருக்கும் மிக முக்கியமான வேற்றுமை ஒன்று இருக்கின்றது . அமெரிக்க பெற்றோர் பிள்ளைகள் குறிபிட்ட வயதினை அடைந்தவுடன் அவர்களது வாழ்க்கையை அவர்களே பார்த்துக்கொள்ள வேண்டும் என தனியே விட்டுவிடுவார்கள் . அவர்களை பொருத்தவரை குழைந்தை வளர்ப்பு என்பது வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே.
ஆனால் இந்தியாவில் மட்டும் தான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதே வழக்கையென கொண்டிருக்க கூடிய பெற்றோர்கள் வாழ்கிறார்கள் . பிள்ளைகளின் எதிர்க்கலாம்தான் வாழ்க்கையின் அர்த்தம் என கருதிடக்கூடிய பெற்றோர்கள் வாழும்முறை தான் இங்கே இருக்கின்றது .
அப்படிப்பட்ட பெற்றோர்களுக்கு உங்களது பிள்ளைகளை சிறப்பானவர்களாக வளர்த்து ஆளாக்கிட சில சிறப்பு வழிமுறைகள் இதோ ….படியுங்கள் .

ரோல்மாடல் (Be a Role Model)

நமது வழக்கத்தில் ஒரு பழமொழி உண்டு .

“அப்பனைபோல புள்ளை தாப்பாம பொறந்திருக்கு ”

இதற்கு அங்க அடையாளம் அப்பாவைப்போல இருப்பதனால் அல்ல . அப்பாவை போலவே பிள்ளையின் நடத்தையும் இருக்கின்றது என்பதற்கான பழமொழி .
பிறந்த குழந்தை ஒவ்வொன்றையும் பார்த்துதான் கற்றுக்கொள்கிறது . குறிப்பாக அக்குழந்தை அதிக நேரம் பெற்றோர் கூடவே இருப்பதனால் அதிகப்படியான பழக்கவழக்கங்கள் பெற்றோரிடம் இருந்தே குழந்தைகளுக்கு போகிறது .ஆகவே உங்களது குழந்தை நல்ல பழக்கவழக்கங்களை கொண்டிருக்க வேண்டும் என விரும்பினால் அந்த பழக்கவழக்கங்களை பெற்றோர்கள் பின்பற்றிட வேண்டும் . குழந்தைகளின் ரோல்மாடல் எப்போதும் பெற்றோர்தான் .

அன்போடு சொல்லிக்கொடுத்திடுங்கள் (Teach with Love)

உங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்திடுங்கள்
குழந்தை அற்புதமான படைப்பு . ஒவ்வொரு குழந்தையும் அன்பையே விரும்புகின்றது . நீங்கள் அவர்களிடம் கண்டிப்புடன் ஏதேனும் ஒரு விசயத்தை திணிக்க முற்படும்பொது குழந்தைக்கு அதன் மீது இயல்பாகவே வெறுப்பு உண்டாகிவிடுகிறது. ஒருவேளை நீங்கள் ஒரு நல்ல விசயத்தை குழந்தையிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள் என விரும்பினால் அது குறித்து அன்போடு குழந்தையிடம் பேசுங்கள் .

அந்த விசயத்தை செய்வதனால் உண்டாகும் நன்மையை அவர்களுக்கு நேரடியாக காட்டிடுங்கள் . அவர்களே விரும்பி செய்ய ஆரம்பித்து விடுவார்கள் .

உதாரணத்திற்கு உங்கள் குழந்தை படித்து ஆட்சியர் ஆகவேண்டும் என விரும்பினால் இப்போது ஆட்சியாளராக இருக்கக்கூடிய புகழ்பெற்றவர்களை காட்டி நீ நன்றாக படித்தால் இவரைப்போல ஆகலாம் என கூறலாம் .

நேர்மறை  சிந்தனைகளை விதைத்திடுங்கள் (Positive Thinking)

குழந்தைகள் கிட்டதட்ட 100 பில்லியன் நியூரான்களுடன் பிறக்கிறார்கள் . அவற்றிற்கு இடையிலான இணைப்புகளே அவர்களின் எண்ணங்களை தோற்றுவிக்கின்றன , செயல்பட வைக்கின்றன , குணத்தினை தீர்மானிக்கின்றன . இவை அனைத்துமே குழந்தைகளின் வாழ்வில் நடக்கக்கூடிய நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டே நடைபெறுகின்றன .

ஆகவே அவர்களுக்கு ஒவ்வொரு நிகழ்வுகளிலும் நேர்மறை சிந்தனையோடு செயல்படுவதற்கு சொல்லிகொடுத்திடுங்கள் .

உதாரணத்திற்கு உங்கள் குழந்தை ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறார் எனில் போட்டி தொடங்குவதற்கு முன்பே தோல்வியையும் வெற்றியையும் எதிர்கொள்ள கற்றுகொடுக்க வேண்டும் .

ஒரு போட்டியில் ஒருவர் மட்டுமே வெல்ல முடியும் , அதனால் தோல்வி அடைந்தவர்கள் அனைவரையுமே நிரந்தரமாக தோற்றவர்களாக கருதக்கூடாது . அவர்கள் முயன்றால் நிச்சயமாக அடுத்த போட்டியில் வெல்ல முடியும் . தோல்வி வெற்றியின் படிக்கட்டு .

வென்றால் , இன்று வென்றுவிட்டோம் என்பதில் ஆனந்தம் அடைந்து அடுத்த போட்டிக்கு தயாராகாமல் விட்டுவிட கூடாது . தோற்றவன் அந்த அனுபவத்தோடு களமிறங்கும்போது நீ மீண்டும் வெல்ல இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என குழந்தைகளிடம் நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும் .

மற்றவர்களுடன் பழகவிடுதல் (Public Relationship)

 

பெரும்பலான பெற்றோர்கள் பாதுகாப்பு என்கிற பெயரில் அண்டை வீட்டாருடன் கூட குழந்தைகளை பழக விடுவது கிடையது . சகவயது குழந்தைகளுடன் விளையாட விடுவது கிடையாது .
இப்படிப்பட்ட பெற்றோர்கள் ,  குழந்தைகளை யாருடன் பழக விடாமல் தடுத்தோமோ அவர்களுடன் தான் வளர்ந்த பின்பு வாழ போகிறார்கள் என்பதை மறந்துவிடுகிறார்கள் .
பாதுகாப்பு அவசியம்தான் , அதோடு சேர்த்து மனிதர்களோடு பழகுவதும் அவசியமான ஒன்று . அவ்வாறு பேசி பழகிடும் போது எவ்வாறு பேசிட வேண்டும் , எவ்வாறு பழகிட வேண்டும் , இந்த சமூகத்தில் மக்கள் எவ்வாறெல்லாம் இருக்கிறார்கள் என்பதனை எளிதில் அறிந்துகொள்வார்கள் .

நம்பிக்கையோடு பொறுப்புக்களை கொடுங்கள் (Give Responsibility and Small Works)

உங்கள் குழந்தையை சின்ன சின்ன விசயங்களில் நம்பி முடிவெடுக்க விடுங்கள் . அவ்வாறு சிறு வயதிலேயே பொறுப்புகளை கொடுத்திடும்போது அவர்களுக்கு தானாகவே சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற அக்கறையும் , அதிக கவனமாக செயல்படவேண்டும் என்கிற பொறுப்பும் வந்து சேரும் .

 

 

 

உதாரணத்திற்கு நீங்கள் குடும்பமாக ஒரு ஊருக்கு செல்கிறீர்கள் என வைத்துக்கொண்டால் உடன்வரும் உங்கள் குழந்தையிடம் பணத்தினை கொடுத்து டிக்கட் எடுக்க சொல்லலாம் , பிறகு அதனை பாதுகாப்பாக வைத்திருக்கவும் சொல்லலாம் . இதுபோன்று செய்வதன் மூலமாக அவர்களின் பொறுப்புணர்வையும்  நம்பிக்கையையும் அதிகரிக்க முடியும் .

இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் விசயங்களை உங்கள் குழந்தைகளை வளர்க்கும் தருணங்களில் செயல்படுத்தி பாருங்கள் . நிச்சயமாக முன்னேற்றம் கிடைக்கும் .

குழந்தைக்கும் மனது உண்டு என்பதை அறிந்தாலே பிரச்சனைகள் வராது .

 உங்களுக்கு ஏதேனும் தெரிந்து இருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள்
 பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version