Site icon பாமரன் கருத்து

ரேப் செய்ய வந்தவனை கொன்ற 19 வயதுபெண் விடுதலை | போராளி

விசாரணைக்குப்பிறகு தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்ய வந்தவரைத்தான் தற்காத்துக்கொள்ள இளம்பெண் கொன்றுள்ளார்  என தெரிந்தபடியால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பெண்கள் மீதான பாலியல் வன்புணர்வு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டும் இருக்கிறார்கள். கொடும் கொடுமைக்கு மரணதண்டனை விதித்தாலும் கூட இக்குற்றங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் பகுதியில் 19 வயதுப்பெண் தனது சொந்தக்காரர் ஒருவரின் வீட்டில் ஒரு வருடமாக தங்கியிருந்தார். கடந்த சனிக்கிழமை இவரை பின்தொடர்ந்து வந்த 24 வயது அஜித் குமார் என்ற சொந்தக்காரப்பையன் கத்தி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளார்.

இதனை சற்றும் எதிர்பாராத அந்தப்பெண் அஜித்குமாரை கீழே தள்ளிவிட்டு பின்னர் கீழே விழுந்த கத்தியை எடுத்து அஜித் குமாரை குத்தினார். இதனால் அவர் இறந்துபோனார். இதனை விசாரித்த காவல்துறையினர் இந்தக்கொலை தற்காத்துக்கொள்வதற்காக செய்யப்பட்டுள்ளது என்பதனை உறுதி செய்தனர்.

ஆகவே அரசியலமைப்புச்சட்டம் Section 100, Clause 3 பிரிவின்படி அவரை காவல்துறையினர் விடுத்துள்ளனர். தற்போது 19 வயதுபெண் காவல்துறையின் பாதுகாப்பில் இருக்கிறார்.

இதுபோன்றதொரு நிகழ்வு 2012 இல் மதுரையிலும் நடைபெற்று இருக்கிறது. குடிபோதையில் தன் மகளிடம் தவறாக நடக்க நினைத்த மனைவியே கணவனைக்கொன்ற போது விடுதலை செய்யப்பட்டார்.

இப்படி துணிச்சலாக செயல்பட்டு தன்னை தற்காத்துக்கொள்ள கொலையும் செய்திட்ட பெண் ஆதலால் தான் அவரை போராளி என தலைப்பில் குறிப்பிட்டு இருந்தேன். பெண்கள் உங்களை தற்காத்துக்கொள்ள கொலையும் செய்யலாம், அதற்கான பாதுகாப்பை அரசியலமைப்பு சட்டம் உங்களுக்கு வழங்குகிறது என்பதனை ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். யாரும் இதனை தவறாகவும் பயன்படுத்திவிடக்கூடாது.

பாமரன் கருத்து

Share with your friends !
Exit mobile version