பெரியார் என்றவுடனும் கடவுள் மறுப்பு கொள்கைகளும் பார்ப்பனர் சமூக எதிர்ப்பும் தான் அனைவரின் கண் முன்பாகவும் வந்து நிற்கின்றது …
ஆனால் அவ்வளவுதான் பெரியார் செய்தாரா என்றால் இல்லை இன்னும் கணக்கில் அடங்காத சமூக மாற்றங்களுக்கு அவர் வித்திட்டுள்ளார் …
குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்தில் …ஆம் பெண்கள் ஆணாதிக்கத்தின் கீழே கிடப்பதை அவர் தன் வாழ்நாள் முழுவதுமாக எதிர்த்துவந்தார் …
இன்று தெற்கில் குழந்தை திருமணம் வடக்கை காட்டிலும் குறைந்து போயிருப்பது யாரால் இந்த ஒற்றை மனிதரால் …
வடக்கில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதத்தை விட தெற்கில் வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் அதிகம் …பெண்கள் பொருளதார தன்னிலை அடையும் போது தான் ஆணாதிக்கத்திலிருந்து விடுபட முடியும் என்கிற அவருடைய எண்ணம் தான் இதற்கு காரணம் ….
இந்த நாளில் பெரியாரை நினைவில் கொள்வோம் …