Site icon பாமரன் கருத்து

ஆள சாச்சுப்புட்ட கண்ணால …

ஆள சாச்சுப்புட்ட கண்ணால …

ஒத்த பார்வையாலே
உசுர உறுஞ்சவளே

ஓர பார்வையாலே
உலகத்த வென்றவளே

ஆள சாச்சுப்புட்ட கண்ணால
தடுமாறி சுத்துறேனே உன்னால

உன் பார்வை மந்திரம் புரிவதெப்போது
என் மனம் இனி தெளிவதெப்போது

மாய மந்திர நம்பிக்கையில்ல
ஆனாலும் தெளிஞ்சுட விருப்பமில்ல

தெருவெல்லாம் பூஞ்சோலை ஆகுதே
வறண்ட என்மனம் பூத்து குலுங்குதே

ஆள சாச்சுப்புட்ட கண்ணால
அடிமனசு குளிருதடி உன்னால

காதல் இல்லை கவிதை
ஸ்ரீ

Exit mobile version