Site icon பாமரன் கருத்து

அமைதியான ஒபாமா மிரட்டும் ட்ரம்ப் – இது அமெரிக்காவின் நிலை …

அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப் இதுவரை இரண்டு மிகபெரிய மாற்றங்களை செய்ய முன்வந்திருக்கின்றார் ..உலகமே வியப்புடனும் பதட்டத்துடனும் ட்ரம்ப் அடுத்து என்ன செய்ய போகின்றார் என பார்த்துக்கொண்டுள்ளன ..

1 .எல்லை சுவர் அமைத்தல்

தனது தேர்தல் அறிக்கையில் கூறியபடியே மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுவர் எழுப்பியே தீருவேன் என்கிறார் ட்ரம்ப் . அண்மையில் நடந்த போரட்டத்தில் பங்கு பெற்றவர்களின் முக்கிய கோரிக்கை அண்டைநாடுகளுடன் நல்லுறவை பேணுவது .

ஆனால் ட்ரம்பின் இந்த சுவர் எழுப்பும் திட்டத்தினால் அமெரிக்க மெக்ஸிகோ உறவுகள் விரிச்சலடைந்துள்ளன .என்னதான் தவறான குடியேற்றங்களை தடுப்பதற்கான நடவெடிக்கையாக இதை பார்த்தாலும் அமெரிக்க மக்கள் இதனை விரும்பவில்லை என்பதே உண்மை .அதோடு மிகபெரிய பொருட்செலவையும் இது ஏற்படுத்தும் .

2 வாட்டர் போர்டிங் சித்திரவதை

இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டபோது புஷ் தீவிரவாதிகளை விசாரிக்க கடுமையான சித்திரவதைகளுக்கு அனுமதியளித்தார் .அந்த திட்டத்தின் பெயரே வாட்டர் போர்டிங் .உலகிலேயே மிக கொடுமையான விசாரனை முறைகள் இதில் கடைபிடிக்கப்பட்டது .

பிற்காலங்களில் சமூகவியலாளர்களின் வேண்டுகோளை ஏற்று ஒபாமா அவர்கள் இந்த விசாரனை முறைக்கு தடைவிதித்தார் .

இப்போது நிர்வாகத்தலைமை ஏற்றுள்ள ட்ரம்ப் வாட்டர் போர்டிங் தண்டணை முறைகள் மீண்டும் அமல்படுத்தப்படலாம் என்று கூறியுள்ளார் …இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது …

அமெரிக்காவின் ஒவ்வொரு மாற்றமும் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தும் ..ட்ரம்ப் இதை உணர்ந்து செயல்படுவாரா என்பது கேள்விக்குறியே ….

ஸ்ரீ

Exit mobile version