பொன்னியின் செல்வன் நாவலுக்கு எப்படிப்பட்ட வாசகர் கூட்டம் உண்டானதோ அதைப்போலவே வேள்பாரி நாவலுக்கும் பெரிய அளவில் வாசகர் கூட்டம் உருவாகிவருகிறது.
வேள்பாரி புத்தகத்தை PDF வடிவில் பெற கீழே இருக்கும் லிங்கை அழுத்துங்கள்.
வேள்பாரி கதை சுருக்கம் :
மேற்குத் தொடர்ச்சி மலையில் வாழ்ந்துவரும் 14 இனக் குழுக்களுக்கு தலைமையாக இருப்பது வேளிர் குலம். அதன் தலைவன் பாரி. காடுகள் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்பதனை பாரி உணர்த்திருந்தபடியால் அன்பால் அவன் கீழ் அனைவரும் செல்லும் விதத்தில் அன்பால் ஆட்சி செய்கிறான். இவனது ராஜ்ஜியம் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான பறம்பு மலையில் இருக்கிறது. அந்த காலகட்டத்தில் மூவேந்தர்கள் சமவெளியில் ஆட்சி செய்கிறார்கள். வேளிர் குலத்தின் வசம் உள்ள தேவவாக்கு விலங்கை மூவேந்தர்களில் ஒருவனான குலசேகர பாண்டியன் அடைய நினைக்கிறான்.
அதில் அவனது துறைமுகம் தீக்கிரையாகிறது. இதனால், சேர, சோழ மன்னர்களையும் தன்னோடு இணைத்துக்கொண்டு, பறம்பு மலையை முற்றுகையிடுகிறான் பாண்டியன். பாரியை மலையைவிட்டு கீழே வரச்செய்ய பாரியின் நண்பனான நீலனையும் பிடித்துவைக்கிறான். பாரிக்கு எதிராக மூவேந்தர்களும் நடத்தும் இந்தப் போரில் வெற்றி பெற்றவர்கள் யார் என்பதுதான் இறுதி அத்தியாயங்களில் சொல்லப்படுகிறது.