Site icon பாமரன் கருத்து

வேலை பார்க்காத உறுப்பினர்களுக்கு எதற்கு ஊதியம் ?

நாடாளுமன்றத்திற்கோ சட்டமன்றத்திற்க்கோ மக்கள் உறுப்பினர்களை தேர்வு செய்து அனுப்புவது மக்கள் தங்களின் குறைகளை எடுத்துசொல்லவே  …அந்த வகையில் பார்த்தால் அவர்கள் மக்கள் வேலைக்கு வைத்த பணியாட்களே
மாத சம்பளம் கொடுத்து போக வர விமான டிக்கட் கொடுத்து அவை நடக்கும் காலங்களில் தினசரி படியையும் கொடுத்து மக்கள் வரிப்பணத்தில் அனுப்பி வைத்தால் அவர்கள் அங்கே போய் செய்வது கூச்சலும் குழப்பமும் தான் ..இவர்கள் இப்படி நடந்து கொள்வதினால் இழப்பு ஒரு லச்சமோ இரண்டு லட்சமோ அல்ல ….பல கோடிகள் …
சில நேரங்களில் அவை முடக்கம் என்பது ஏற்றுக்கொள்ள கூடியதுதான் ..ஆனால் ஒரு கூட்டத்தொடர் முழுவதுமே முடக்குவது என்பது மக்களுக்கு செய்யும் துரோகம் …
ஒழுங்காக அவையை வழிநடத்தி செல்லவேண்டிய பொறுப்பு அவை தலைவருக்கே உண்டு ..அதற்கென அவருக்கு சில அதிகாரங்களும் கொடுக்கப்பட்டுள்ளன ….அதை அவர் செயல்படுத்தினாலே அவையை முன்னோக்கி நகர்த்த முடியும் …கூச்சல் குழப்பம் ஏற்பட்டால் உடனே இரண்டு கத்து கத்திவிட்டு அவையை ஒத்திவைக்க கூடாது ..
அனைத்து ஊழியர்களை போலவும் இந்த மக்கள் பிரதிநிதிகளும் அரசு பொது ஊழியர்களே ..அப்படி இருக்கும் நிலையில் இவர்கள் அவையில் ஒழுங்காக பணியினை செய்யாதிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஏன் ஊதியம் ….
( பெரும்பலான மக்கள் பிரதிநிதிகள் அவையில் பேசுவதே இல்லை .காரணம் அவர்களில் பலருக்கு ஹிந்தி தெரியாது …ஆங்கிலமும் அவ்வளவு தெரியாது அப்படி இருக்கையில் புரிந்து பேசுவது இயலாத ஒன்று ….ஆனால் அவர்களை அனுப்பியது யார் தவறு )

Share with your friends !
Exit mobile version