Site icon பாமரன் கருத்து

வரங்கள் கேட்கிறேன் !

வரங்கள் கேட்கிறேன் !

 

வானமெங்கும் கண்கள் கேட்கிறேன்
வஞ்சியவள் அழகை ரசிக்க !

மலர்களெங்கும் கரங்கள் கேட்கிறேன்
அழகியவள் கூந்தல் வருட !

பூமியெங்கும் பூக்கள் கேட்கிறேன்
நடக்குமவள் பாதம் தாங்க !

நதிகளெங்கும் சந்தனம் கேட்கிறேன்
குளிக்குமவள் பொன்மேனி பூச !

வரங்கள் கிடைக்குமோ ?

ஸ்ரீ

Exit mobile version