சாதகங்கள் :
இந்திய அரசால் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் தனது உற்பத்தி திறனுக்கு ஏற்றவாறு வெளியிடப்படும். இந்த பணம் அனைத்தும் புழக்கத்தில் இருந்தால் விலைவாசி பொருளாதாரம் அனைத்தும் நினைத்த பாதையில் செல்லும்.
ரொக்கமில்லா இந்தியாவில் பணத்தினை புழக்கத்திலிருந்து மறைத்துவைக்க முடியாது .எனவே கருப்பு பணம் ஒழிக்கப்படும் .
சிறு வணிகர்கள் முதற்கொண்டு பொருள்களை வாங்குவோரும் விற்போரும் வருமான வரி கணக்கிற்குள் கொண்டுவர படுவார்கள். எனவே அரசின் வருவாய் கண்டிப்பாக உயரும்.
வருவாய் அதிகமாவதால் விலைவாசி குறையலாம்,அரசின் திட்டங்களுக்கு அதிக பணம் ஒதுக்கப்படலாம்.
ஒவ்வொரு முறையும் பணம் அச்சடிப்பதற்கான செலவு குறையும்.
அனைத்து மக்களையும் கண்காணிப்பது எளிதாகும். எனவே ஊழலை ஓரளவு குறைக்கலாம்
========================================================================
பாதகங்கள் :
அண்மையில் வெளியிட்ட ஒரு தரவின்படி இந்தியாவில் மேற்கொள்ளப்படும் மின்னணு பண ப
ரிமாற்றம் அத்தனையுமே பாதுகாப்பற்றவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .முற்றிலும் மின்னணு பண பரிமாற்றம் என்கிறபொழுது நம்மிடம் எந்த ஹேக்கர்ஸும் நுழையாத அளவிற்கு பாதுகாப்பான தொழிநுட்பங்கள் உள்ளதா என்பதே மிகப்பெரிய கேள்வி ?
ஒருவேளை ஹேக்கர்கள் நுழைந்துவிட்டால் இந்திய பொருளாதாரம் ஒரே நொடியில் அதள பாதாளத்திற்கு சென்றுவிடும்.
அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு. இங்கு பெரும்பாலான கிராமங்களில் நேரடியாக வயலுக்கு சென்றே பொருள்களை வாங்குவதோ அல்லது கொள்முதல் செய்யும் வேளையில் சுவைப் மிஷினை எப்படி பயன்படுத்த முடியும்.
மேலும் திடீரென்று நெல் போடுவார்கள்..பருவநிலை நன்றாக இருந்தால் வெள்ளரி போடுவார்கள். ஆக விவசாயம் செய்வோமா என்பதே நிச்சயமாக தெரியாத சூழ்நிலையில் சுவைப் மிஷினை வாடகை கொடுத்து எப்படி நிர்வகிக்க முடியும் . (குறைந்த மதிப்புடைய நோட்டுகளாவது புழக்கத்தில் இருக்க வேண்டும்..ஆனால் அதையும் பதுக்கினால் ?)
மின்சாரமே இன்னும் அனைத்து மக்களுக்கும் முழுவதுவாக கிடைக்காத பொழுது மின்னணு பண பரிமாற்றமுறை சாத்தியமா ? என்பது கேள்விக்குறி …
ஏற்கனவே ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தரவுகள் திருடப்பட்டன என்கிற செய்தி நமக்கு கிடைத்தது இந்தியாவின் மிகப்பெரிய வங்கிக்கே இந்த நிலைமை என்றால் மற்ற வங்கிகளின் பாதுகாப்பு ?
===============================================================
முற்றிலும் மின்னணு பண பரிமாற்ற முறை என்பது நல்ல விஷயமாக இருந்தாலும் போதிய உயர்ந்த பாதுகாப்பு வசதிகள் இல்லாமலோ ,மக்களிடம் இலவசமாக சுவைப் மிஷினை கொண்டு சேர்க்காமலோ , அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம், டவர் கிடைப்பதை உறுதி செய்யாமலோ மின்னணு பணப்பரிமாற்றம் என்பது இந்தியாவிற்கு பாதகங்களை அதிகமாக தரும்.
ஒருவேளை நாம் இந்த இடையூறுகளை தாண்டி ரொக்கமில்லா முறைக்கு வருவோமேயானால் அது கண்டிப்பாக பலனை அளிக்கும் என்பதிலும் மாற்று கருத்தில்லை