ரிலையன்ஸ் பிக் டிவி ஐந்து ஆண்டுகளுக்கு இலவசம் அதோடு ஒரு ஆண்டுக்கு HD இலவசம் என விளம்பரங்களை பார்த்துவிட்டு அதை வாங்கி இலவசமாக பார்த்துவிடலாம் என நம்மில் பெரும்பாலானோர் முடிவு செய்திருக்கலாம்.
உண்மையில் ரிலையன்ஸ் பிக் டிவி க்கு வழங்கப்பட்டுள்ள ஆபர் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
> நீங்கள் புக் செய்வதற்கு முன் பணமாக 499 ரூபாய் அளிக்க வேண்டும்.
> உங்கள் வீட்டில் Dish ஐ பொருத்தும் போது அதற்கான கட்டணமாக 1500 ரூபாய் செலுத்த வேண்டும்
> Dish ஐ பொறுத்த வந்திருக்கும் நபருக்கு 250 ரூபாய் சம்பளமாக கொடுக்க வேண்டும்.
சரி இலவசம் என்றார்களே என்கிறீர்களா ?
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் செலுத்திய கட்டணம் 499 + 1500 = 1999 ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும். அதற்கும் நீங்கள் இதனை கண்டிப்பாக செய்திருக்க வேண்டும்,
முதலாம் ஆண்டு இலவசமாக பயன்படுத்திய பிறகு, அதாவது இரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மாதம் 300 ரூபாய் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்கு கொடுத்து பார்த்தால் மட்டுமே உங்களுக்கு 1999 ரூபாய் திரும்ப கொடுக்கப்படும்.
மூன்றாண்டுகளுக்குள் இதனை விட எவ்வளவு ஆபர்கள், தொழில்நுட்பங்கள் வருமென்று தெரியாத போது இதனை வாங்குவது பயனளிக்குமா என தெரியவில்லை.
நன்றி
பாமரன் கருத்து